Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் சினிமா, குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்த 79 சதவீதம் பேர்

14 ஜூலை, 2019 - 12:17 IST
எழுத்தின் அளவு:
79-percent-fans-support-kushboo-to-return-to-cinema

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்தவர். பின்னர், இயக்குனர் சுந்தர் சியைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

தற்போது டிவி தொடரில் மட்டும் நடித்து வருகிறார். நேற்று டுவிட்டரில் மீண்டும் சினிமாவில் நடிக்க வரலாமா என ஆலோசனை கேட்டார். “நண்பர்களே, உங்கள் ஆலோசனை தேவை. மீண்டும் சினிமாவில் நடிக்கட்டுமா ?. கூட்டத்தில் காணாமல் போக விரும்பவில்லை. சுவாரசியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கலாம். எனது மூத்த மகள் கல்லூரிக்குச் செல்கிறாள். இப்போது நேரமிருக்கிறது, நடிக்கலாமா ?,” எனக் கேட்டிருந்தார். அதற்கு பலரும் அவர்களது ஆலோசனைகளைப் பதிவிட்டனர். இது சம்பந்தமாக டுவிட்டரில் குஷ்பு வாக்கெடுப்பும் நடத்தினார். வாருங்கள் என 79 சதவீதம் பேரும், வேண்டாமென 21 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.


பின்னர் மீண்டும் ஒரு பதிவில், “அதிகப்படியான ரெஸ்பான்ஸ். நீங்கள் இல்லாமல் நான் எதையும் செய்ததில்லை. இனி, கதைகளைக் கேட்க ஆரம்பிப்பேன். ஏற்கெனவே சொன்னது போல, கூட்டத்தில் காணாமல் போக விரும்பவில்லை. அர்த்தமுள்ள, தரமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்,” எனத் தெரிவித்துள்ளார்.


குஷ்பு கடைசியாக 2011ம் ஆண்டு வெளிவந்த இளைஞன் படத்தில்தான் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன் பின் நான்கு படங்களில் சிறப்புத் தோற்றமாக மட்டுமே வந்து சென்றார். விரைவில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தமிழ்ப் படத்தைப் பார்க்கலாம்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சம்பள உயர்வு, ராஷ்மிகா விளக்கம்சம்பள உயர்வு, ராஷ்மிகா விளக்கம் சிவகார்த்திகேயன் 16, குடும்பப் படம் தான்... சிவகார்த்திகேயன் 16, குடும்பப் படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 13:34 Report Abuse
Vasudevan Srinivasan வெறும் கவர்ச்சி பொம்மையாய் இல்லாமல் சிறந்த நடிப்பால் உயர்ந்த நிலையையை அடைந்தவர் குஷ்பூ அவர்கள் ஒரே சமயத்தில் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் (ஜாதிமல்லி), இயக்குனர் இமையம் பாரதிராஜா (கேப்டன் மகள்) நடித்து புகழ்ச்சியும் பெருமையும் பெற்றவர். மீண்டும் வரவேண்டும் ஜோதிகா அவர்களைப்போல முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடித்து ஜொலிக்கவேண்டும்
Rate this:
G Mahalingam - Delhi,இந்தியா
14 ஜூலை, 2019 - 13:16 Report Abuse
G  Mahalingam அரசியல் புஸ். எதிர்காலம் காங்கிரஸில் இல்லை. எனவே சினிமாவில் தாயார் வேடம் தாயரிப்பாளர் மனது வைத்தால் தயராக உள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in