Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட நடிகர்கள் துன்புறுத்துகிறார்கள்: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார்

14 ஜூலை, 2019 - 11:36 IST
எழுத்தின் அளவு:
vijayalakshmi-complaint-against-kannada-actors

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஆனாலும் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். பூந்தோட்டம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பிரண்ட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு ராமச்சந்திரா, மிலிட்டரி உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக மீசைய முறுக்கு படத்தில் நடித்தார்.

தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாததால் தற்போது பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார். தற்போது அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் கன்னட நடிகர்களால் துன்புறுத்தப்படுவதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பண உதவி செய்யுங்கள் என்றும் பேசியிருக்கிறார். அவர் பேசியிருப்பது வருமாறு:


நான் நடிகை விஜயலட்சுமி. ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பேன். தற்போது பெங்களூரில் இருந்து இந்த வீடியோவை வெளியிடுகிறேன். 6 மாதத்துக்கு முன்பு நான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அந்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் பெங்களூரு வந்தேன். இங்கு வந்து 2 படங்களில் நடித்தேன்.


கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னை வற்புறுத்தினார்கள். ஆனால் எனது உடல்நிலையைக் காரணம் காட்டி அதை மறுத்துவிட்டேன். தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது பலரும் என்னுடைய பேச்சில் தமிழ் வருகிறது என்று கூறி கேலி செய்தார்கள். ஒருகட்டத்தில் எனது உடல்நிலை மோசமானது. இந்த செய்தியை மீடியாவில் பார்த்து அறிந்துகொண்ட நடிகர் சுதீப் எங்களுக்கு உதவினார்.


எனது உடல்நிலை மோசமடைந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். ரவி பிரகாஷ் என்ற கன்னட நடிகர் எனக்கு உதவி செய்து விட்டு என்னை டார்ச்சர் செய்தார். என்னைப் பற்றி ஊடகங்களிலும் தவறான செய்திகளைப் பரப்பினார். அவர் மீது புகார் தெரிவித்ததால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது அதனால் அவர் என்னைப் பற்றி நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.


நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் ரவி பிரகாஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எனக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. நான் ஒரு தமிழ் பெண் என்பதால் என்னை இங்கு துன்புறுத்துகிறார்கள். புகார் அளித்தால்கூட அதை கன்னடத்தில் எழுதச் சொல்கிறார்கள். இந்த ஊரில் மாட்டிக் கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன். சென்னை திரும்ப விரும்புகிறேன்.


மருத்துவ செலவுக்காக நான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க எனக்கு நேரம் வேண்டும், சினிமாவில் நடிக்க வேண்டும். ஆனால் ஷ¨ட்டிங் போக முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு யாருமே உதவி செய்யக்கூடாது என்று இங்குள்ளவர்கள் கூறி வருகிறார்கள். மறுபடியும் என் உடல்நிலை மோசமாவதற்குள் தமிழ் திரையுலகினரின் கவனத்துக்கு இதை கொண்டு செல்கிறேன். எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யுங்கள் என்று எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயலட்சுமி பேசியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதிய கல்வி கொள்கையால் தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்படும்: சூர்யா ஆவேசம்புதிய கல்வி கொள்கையால் ... ஹாலிவுட் நடிகை பாணியில் சுஜாவாருணி வெளியிட்ட கர்ப்பிணி கவர்ச்சி படங்கள் ஹாலிவுட் நடிகை பாணியில் சுஜாவாருணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in