Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய கல்வி கொள்கையால் தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்படும்: சூர்யா ஆவேசம்

14 ஜூலை, 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
surya-critizise-new-educational-policy

சூர்யாவின் மனைவி ஜோதிகாக நடித்த ராட்ச்சசி படம் புதிய கல்வி கொள்கை மற்றும் அரசு பள்ளிகளின் அவலநிலை பற்றி பேசியது. ஜோதிகாவும் பத்திரிக்கையார் சந்திப்பில் "மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான தகுதியான கல்வி வழங்காமல் நீட் தீர்வை திணிக்க கூடாது" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வு மற்றும், புதிய கல்வி கொள்கைளை சூர்யா கடுமையாக விமர்சித்து பேசினார்.

சூர்யாவின் தந்தை சிவகுமார் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளையின் 40 ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூர்யா பேசியதாவது:


30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்து பேசவில்லை? குரல் எழுப்பியவர்களுக்கு நன்றி தெரித்துக்கொள்கிறேன். இதுதான் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றப் போகிறது. கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.


கிராமப்புறப் பள்ளிகள், ஏழை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. கல்விக் கொள்கையின் குழு, ஓராசிரியர் அல்லது 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுபோல 1,848 பள்ளிகள் உள்ளன. அந்த மாணவர்கள் எங்கே செல்வார்கள்? நான் சென்னையில் படிக்கும் மாணவர்களை பற்றி பேசவில்லை. பஸ் வசதி கூட இல்லாத மாணவர்கள், பழங்குடி மாணவர்களின் ஆரம்பகாலப் பள்ளி வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது? இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பார்கள். கிட்டத்தட்ட 50 சதவிகித மாணவர்கள் அரசுப் பள்ளிகளில், கிராமங்களில் படிப்பவர்களே.மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். 3, 5, 8 ஆவது வகுப்புகளில் பொதுத் தேர்வாம். வளர்ந்த நாடுகளில் 8ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை. இந்திய அளவில் 95 சதவிகிதம் பேர் ஆரம்பக் கல்வியைப் படிக்கிறார்கள் எனில், அதில் 55 சதவிகிதம் பேர் மட்டுமே 11ஆம் வகுப்பு சேர்கிறார்கள். 30 சதவிகித மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமலேயே படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி நீட் எழுதச் சொல்வீர்கள்?


கடந்த முறை 1,80,000 அரசுப்பள்ளி மாணவர்களில் ஒருவரால் மட்டுமே நீட்டில் தேர்ச்சி பெற முடிந்தது. நீட் தாண்டி மற்ற எல்லா டிகிரிகளுக்குமே இந்த நுழைவுத் தேர்வு வரப்போகிறது. இது ஆரம்பிப்பதற்கு முன்னாலே, கோச்சிங் சென்டர்களின் வருமானம் ரூ.5,000 கோடி என்கிறார்கள். இனியும் அவை காளான்கள் போல நிறைய முளைக்கும். இந்த நிலையில் அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன செய்வார்கள்?


நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள், 12 ஆயிரம் கல்லூரிகளாகக் குறைக்கப்படும் என்கிறார்கள். இதிலிருந்து கிராமப் புறக் கல்லூரிகள் மூடப்படுமோ என்ற கேள்வி எழுகிறது. இது ஏன் என்று யாருக்குமே விழிப்புணர்வு ஏற்படவில்லை. இது அகரம் அறக்கட்டளையில் இருந்து உங்கள் அனைவருக்குமான கேள்வி. இவ்வாறு சூர்யா பேசினார்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்சிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா ... கன்னட நடிகர்கள் துன்புறுத்துகிறார்கள்: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் கன்னட நடிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
16 ஜூலை, 2019 - 02:15 Report Abuse
TAMILAN சூர்யா தைரியமானவர். சூப்பர் ஸ்டார் என்பதற்கு தகுதியானவர்
Rate this:
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
15 ஜூலை, 2019 - 08:35 Report Abuse
Chandrasekar Ganesh நல்லா சொன்னீங்க பாஸ் asagh busagh
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
14 ஜூலை, 2019 - 17:23 Report Abuse
Asagh busagh நாட்டின் எதிர்காலத்துக்கு தரமான கல்வி அவசியம். அந்த தரத்துக்கு கல்விய கற்பிக்க முடியாம வெறுமனே காசு பார்க்கும் பள்ளிங்கல மூடியே தான் ஆகணும். ஒரு நல்ல விஷயத்துக்காக சில பல கஷ்டங்கள தாங்கி தான் ஆகணும். நீ நடிக்கிற வேலைய மட்டும் பாரு. ஏதோ நாட்டின் கல்வித்துறைய ஆராய்ந்து கரைச்சு குடிச்ச மாதிரி பொங்காத. இதுக்கான வல்லுநர்கள் முதல தங்களோட கருத்த பதியட்டும் அதுக்கு அப்புறம் உன்னை மாதிரி அரைவேக்காடுகள் பிரபலம்கிற போர்வையில எதையாவது கூவிட்டு போங்க. இப்போ போயி ஒழுங்கா வரிசையில நில்லு.
Rate this:
AR -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2019 - 15:27 Report Abuse
AR உங்கள் பிள்ளைகள் படிக்கும் சிஷ்யா பள்ளியில்  மும்மொழி கட்டாயமாமே?
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
14 ஜூலை, 2019 - 12:19 Report Abuse
siriyaar some idiots feels only eligibility to criticise is become an film actor. even he can not fight and win his own house security. when he dance with anusha while anuska where third class dressing will it not spoil youths.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in