Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்

13 ஜூலை, 2019 - 18:41 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-association-suffers

தமிழ்த் திரையுலகில் உள்ள மூன்று முக்கிய சங்கங்கள் தற்போது கடும் சிக்கலில் சிக்கித் தவித்து வருகின்றன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆகியவைதான் அந்த மூன்று முக்கிய சங்கங்கள்.

விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சரியில்லை என அவருக்குப் பிடிக்காத சிலர், அரசு ஆதரவுடன் அந்த நிர்வாகத்தை நீக்கிவிட்டு அரசு அதிகாரியை நியமிக்க வைத்தனர். அரசு அதிகாரி செயல்படுகிறாரா இல்லையா என்று தெரியாத அளவிற்கு சங்கத்திற்கு ஆலோசனைக் குழுவாக நியமிக்கப்பட்டவர்கள் நாளுக்கு ஒரு மீட்டிங்கை நடத்திக் கொண்டு தங்களது இருப்பைக் காட்டி வருகிறார்கள். சினிமா சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்காமல் விளம்பரத்திற்காகவும், மீடியாக்களில் செய்திகள் வருவதற்காகவுமே அவர்கள் செயல்படுபவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாசர் தலைமையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது என நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. அந்தத் தடையை நீக்க வேண்டும் என செயலாளல் விஷால் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்ட பின்னும் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், அந்த சங்கமும் செயல்படாத நிலையில் உள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு அடுத்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக வேட்பு மனு தாக்கலில் பிரச்சினை ஏற்பட்டு, இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் உள்ளிட்டோர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். அதற்கு முன்னதாக பாரதிராஜா போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த இயக்குனர்கள் சங்கத் தேர்தலிலும் தற்போது பிரச்சினைகளும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்கள் அதிக வசூலைக் குவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், தின்பண்டக் கட்டணம் என பல பிரச்சினைகளே தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் இருக்கக் காரணமாக இருக்கிறது. அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் முக்கிய சங்கங்கள் அவர்களுக்குள் இருக்கும் அரசியலால் மோதிக் கொண்டிருக்க, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற யார் வரப் போகிறார்கள் என்பது தெரியாமலேயே சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பல இளம் திறமைசாலிகள் பல கனவுகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கடன் வாங்கப்பட்ட 'ராட்சசி' தலைப்புகடன் வாங்கப்பட்ட 'ராட்சசி' தலைப்பு புதிய கல்வி கொள்கையால் தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்படும்: சூர்யா ஆவேசம் புதிய கல்வி கொள்கையால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2019 - 16:25 Report Abuse
shoba Ban so called top heros (hahaha) vijay and ajith, suriya, movies.. provlem will be solved.
Rate this:
GBR -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2019 - 09:56 Report Abuse
GBR Ban tamil cinema. They are cultural threat and spoiling all our youngsters. Also ban small screen. Serials are spoiling housewives and elder women. More crimes against women are happening due to cinema.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14 ஜூலை, 2019 - 08:14 Report Abuse
Natarajan Ramanathan பல்ல பேத்துட்டா....... பக்கோடா இல்ல, பஞ்சு மிட்டாய்கூட சாப்பிட முடியாது. பரட்டைக்காவது ஏதோ கொஞ்சம் திறமை இருக்கு. அதுகூட இல்லாத ஒரு மண்ணு 63 படம் நடித்துவிட்டதுதான் கொடுமை.
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
13 ஜூலை, 2019 - 20:04 Report Abuse
Asagh busagh எதுக்கு காப்பாத்தணும்? 50 வருஷமா இருக்கிற ஒரு தொழில் நாளடைவுல அழிஞ்சு போறதுல ஒன்னும் தப்பே இல்ல. இதுல இருக்கிற கருப்பு பணம் எல்லாம் சிறுதொழில், கல்வி சம்மந்தப்பட்ட துறைக்கு வந்தா நாடு சுபிச்சம் அடையும். 70 வயசுல 20கல் குமரிகளோட பரட்டையன் ஆடி பாடுறதெல்லாம் எவ்வளவு நாள் பார்க்கிறது? இவனுங்கள வீட்டுக்கு அனுப்புனா நாடாவது கொஞ்சம் உருப்படும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in