Advertisement

சிறப்புச்செய்திகள்

உச்சநட்சத்திரத்தை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் : பாராட்டுகளால் இயக்குநர் நெகிழ்ச்சி | தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி | 2022 டிசம்பரில் இவ்வளவு படங்கள் வெளியாகுமா? | 'டிமான்டி காலனி 2' படப்பிடிப்பு ஆரம்பம் | தி காஷ்மீர் பைல்ஸ் படம் கற்பனை என்று நிரூபித்தால் படம் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன் : இயக்குனர் சவால் | மண்சார்ந்த படங்களையே உயிர் உள்ளவரை எடுப்பேன் : தங்கர் பச்சான் | முதல்வர் வேடத்தில் விஜய்சேதுபதி? | தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி | தமிழில் இன்று 'கோல்டு' வெளியாகாதது ஏன்? | ரஷ்யாவில் 'புஷ்பா' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடன் வாங்கப்பட்ட 'ராட்சசி' தலைப்பு

13 ஜூலை, 2019 - 18:35 IST
எழுத்தின் அளவு:
Raatchasi-title-get-from-other-producer

அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில், ஜோதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'ராட்சசி' படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்திற்கான தலைப்பை அசோக் ரங்கநாதன் என்ற தயாரிப்பாளரிடமிருந்து கடன் கேட்டு வாங்கியுள்ளனர்.

இப்போதெல்லாம் படத்தலைப்புக்கு மிகவும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வந்த பிறகு பலரும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் பொருத்தமான தலைப்பு கிடைக்காமல் பலரும் திண்டாடி வருகிறார்கள். அது போலத்தான் 'ராட்சசி' படத் தலைப்பையும் ஒரு தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

தலைப்பை அடுத்த நிறுவனத்திற்கு தருபவர்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் தருவார்கள். ஆனால், தயாரிப்பாளர், இயக்குனர் அசோக் ரங்கநாதன் எந்தப் பணமும் வாங்காமல் 'ராட்சசி' தலைப்பை விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது பற்றி அசோக் ரங்கநாதன் பதிவிட்டுள்ளதாவது, “ராட்சசி தலைப்பை என் படத்திற்காக முறைப்படி பதிவு செய்து வைத்திருந்தேன். நண்பரும் தயாரிப்பாளருமான எஸ்ஆர் பிரபு அவர்கள் அந்த தலைப்பின் மீது ஈர்க்கப்பட்டு, நண்பர் கஸாலி சார் மூலம் கேட்க, என்னை நன்கு புரிந்த கஸாலி சார் பணம் கொடுப்பதாக கேட்டால் தலைப்பைத் தர மறுப்பார், நட்பாக கேட்போம் என்று கேட்கப்பட்டது.

நானும் மகிழ்ச்சியுடனே கொடுத்தேன். இன்று ராட்சசி பெரிய வெற்றி அடைந்து, தலைப்பை வழங்கியதற்காக, படத்தின் முன்பகுதியில் நன்றி அசோக் ரங்கநாதன் என்று என் பெயரை சேர்த்து கவுரப்படுத்திய நண்பர் எஸ்ஆர் பிரபு அவர்களுக்கு நன்றி. படைப்பாளி ஆகிய என் எண்ணமும் சிந்தனையும் வெகுஜன மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் போது மனம் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறது. ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும். ராட்சசி இன்னும் பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன்,” என்று வாழ்த்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆடை - ஒரு டீசர், ஒரு காட்சி, ஓகோ வியாபாரம்ஆடை - ஒரு டீசர், ஒரு காட்சி, ஓகோ ... சிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள் சிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in