Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆடை - ஒரு டீசர், ஒரு காட்சி, ஓகோ வியாபாரம்

13 ஜூலை, 2019 - 18:31 IST
எழுத்தின் அளவு:
Aadai-business-in-high

ஒரு படத்தின் வியாபாரத்திற்கு ஒரு டீசர் இந்த அளவிற்கு உதவி புரியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் 'ஆடை' படம். 'மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இது.

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அமலா பால் ஒரு காட்சியில் ஆடை இல்லாமல், கை, கால்களை மடக்கிக் கொண்டு நிர்வாணத் தோற்றத்தில் அமர்ந்திருக்கும் காட்சி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், அந்த டீசர் 1 கோடி பார்வைகளை நெருங்க உள்ளது. அடுத்து கடந்த வாரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். அதுவும் 40 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

டீசர் வெளியான உடனேயே படத்தின் வியாபாரம் வேகமாக நடந்து முடிந்துவிட்டதாம். தெலுங்கிலும் படத்தை 'அம்மே' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அங்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம்.

அடுத்த வாரம் ஜுலை 19ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் எப்படியும் வசூலைக் குவித்துவிடும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கட்டுப்பாடுகளால் தடுமாறும் நேற்றைய படங்கள்கட்டுப்பாடுகளால் தடுமாறும் நேற்றைய ... கடன் வாங்கப்பட்ட 'ராட்சசி' தலைப்பு கடன் வாங்கப்பட்ட 'ராட்சசி' தலைப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14 ஜூலை, 2019 - 08:18 Report Abuse
Natarajan Ramanathan Well said Mr.Vasanth - Chennai.
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
14 ஜூலை, 2019 - 01:00 Report Abuse
Vasanth இத்தனை பேர் பார்க்கிறார்கள், இத்தனை ஆதரவு என்பதெல்லாம் சமுதாயம் கெட்டு விட்டது என்பதின் அடையாளம். நிறைய பேர் இது விழிப்புணர்வு என்றோ, தைரியம் என்றோ, முன்னேற்றம் என்றோ பலவாறாக கூறலாம். ஆனால், நாளடைவில் இதே செயலை பல இளம் பெண்களும் (tiktok, instagram, etc... ஆபாச செல்ஃபி வீடியோ போன்று) செய்து காட்டும் நிலை நாட்டில் உருவாகும். கெட்ட விஷயங்கள் ஆரம்பத்தில் அச்சுறுத்தாது. அதன் விளைவு மோசமான நிலைக்கு இட்டு செல்வது உறுதி. இத்தகைய படங்களுக்கு ஆதரிப்பவர்களின் வீட்டு பெண்கள் செய்யாத வரையில் அடுத்த வீட்டு பெண்கள் செய்வதை பாராட்டுவார்கள். வெளிநாட்டு பெண்களின் தைரியம் என்பது பல ஆபத்துகள் இருந்தும் காவல் துறையில் அதுவும் மிக ஆபத்தான போதை கடத்தல் பிரிவில் பணி புரிவது, விமான ஓட்டிகளாக, மேலாண்மை துறையில், மருத்துவராக, சுயமாக நிறுவனங்கள் (cake, decorators, rental house communicator, etc...), பெண்களை மதிக்க வேண்டும் என்று wonder women, cat women, supergirl, black widow, batgirl, Harley Quinn போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கி ஸ்கர்லெட் ஜான்சன், ஹேலிபரி, ஜெனிபர் கார்னர், ஆலிஸ்யா ஸில்வர்ஸ்டோன், லின்டா கார்டர், etc.... போன்ற பல நடிகைகள் கம்பீரமாக பெண்மைக்கு மதிப்பையும், பெருமையையும் சேர்கிறார்கள். ஆனால், இங்கு "BOLD" எனப்படுவது ஒரு பெண் மேலாடை அணியாமலோ, புகை பிடிப்பதையோ, மது அருந்துவதையோ, கெட்ட வார்த்தை பேசினாலோ, செய்தால் பாராட்ட பயன்படுத்தும் வார்த்தை. அன்றாடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடூர குற்றங்களுக்கு இத்தகைய நடிகைகளும், படங்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் ஒரு வகையில் காரணம். சமீபத்தில் வெளியான "100" படம் இன்றைய இளைய தலைமுறை எந்த அளவுக்கு கொடூரமாக உள்ளார்கள் என்பதற்கு சரியான உதாரணம். பெண்களை கவர்ச்சியாக, ஆபாசமாக பயன்படுத்தி நடத்தப்படும் காதலிக்க நேரமில்லை, பிக் பாஸ், சகலை vs ரகளை, etc...... போன்ற நிகழ்ச்சிகளை, படங்களை வீட்டில் குடும்பத்தோடு பார்ப்பதை நிறுத்தினால் மட்டுமே கொடூர குற்றங்கள் குறையும். தட்டி கேட்க எண்ணம் தோன்றும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in