18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
ஒரு படத்தின் வியாபாரத்திற்கு ஒரு டீசர் இந்த அளவிற்கு உதவி புரியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் 'ஆடை' படம். 'மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இது.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அமலா பால் ஒரு காட்சியில் ஆடை இல்லாமல், கை, கால்களை மடக்கிக் கொண்டு நிர்வாணத் தோற்றத்தில் அமர்ந்திருக்கும் காட்சி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், அந்த டீசர் 1 கோடி பார்வைகளை நெருங்க உள்ளது. அடுத்து கடந்த வாரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். அதுவும் 40 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
டீசர் வெளியான உடனேயே படத்தின் வியாபாரம் வேகமாக நடந்து முடிந்துவிட்டதாம். தெலுங்கிலும் படத்தை 'அம்மே' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அங்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம்.
அடுத்த வாரம் ஜுலை 19ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் எப்படியும் வசூலைக் குவித்துவிடும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.