Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கட்டுப்பாடுகளால் தடுமாறும் நேற்றைய படங்கள்

13 ஜூலை, 2019 - 18:26 IST
எழுத்தின் அளவு:
July-12-release-movie-suffer-due-to-producer-councils-rule

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் இடைவிடாமல் நான்கைந்து படங்கள் வெளிவருகின்றன. இதனால் குறைந்த பட்சமாக 100 தியேட்டர்கள் கூட கிடைக்காமல் சில சிறிய படங்கள் சிக்கித் தவிக்கின்றன. அவற்றைச் சரி செய்ய வேண்டிய தயாரிப்பாளர் சங்கம், தற்போது அரசு அதிகாரியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அவருக்கு ஆலோசனைக் குழுவாக இருப்பவர்களும் வெளியீட்டுச் சிக்கல்களைத் தீர்க்காமல் வேறு எதையெதையோ பேசி வருகிறார்கள்.

நேற்று வெளியான “கூர்கா, கொரில்லா, வெண்ணிலா கபடி குழு 2, தோழர் வெங்கடேசன், போதை ஏறி புத்தி மாறி' ஆகிய படங்களுக்கு சிட்டி தியேட்டர்களைத் தவிர மற்ற தியேட்டர்களில் 100 பேர் கூட வரவில்லையாம்.

'போதை ஏறி புத்தி மாறி' படத்திற்கு நேற்று காலை காட்சிக்கே ஆளில்லாமல் போனதால் பல ஊர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாம். 'கூர்கா, கொரில்லா' ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தியேட்டர்களுக்கு வந்தார்களாம்.

பத்திரிகைகளைத் தவிர இணையதள மீடியாக்களைத் தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்படுத்தியதால் நேற்று வெளியான படங்களுக்கும் அதிகமான விமர்சனங்கள் வெளிவரவில்லை. விடுமுறை நாட்களான இன்றும் நாளையும் கூட நேற்று வெளியான ஐந்து படங்களும் ஒரு காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை.

தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் இருக்க பல காரணங்கள் இருக்க, மீடியாக்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் தங்கள் படங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் குமுறி வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வெப்சீரிஸில் சமந்தாவெப்சீரிஸில் சமந்தா ஆடை - ஒரு டீசர், ஒரு காட்சி, ஓகோ வியாபாரம் ஆடை - ஒரு டீசர், ஒரு காட்சி, ஓகோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Jayvee - chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 14:57 Report Abuse
Jayvee athennaya kiruthuva தேவதாசி போஸ்ல ஒருத்தன்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 13:29 Report Abuse
Vasudevan Srinivasan மீடியாக்கள் விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறுவதும் ஒருவகையில் படங்களை பாதிக்கும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in