பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் | படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு |
2005ல் தெலுங்கில் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அதன்பிறகு சுந்தர்.சி இயக்கிய ரெண்டு படத்தில் தமிழுக்கு வந்தார். பின்னர் பல படங்களில் நடித்தவருக்கு 2009ல் அவர் நடித்த அருந்ததி படம் தான் தமிழ், தெலுங்கில் அனுஷ்காவை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
பாகமதி படத்திற்கு தற்போது சைலன்ஸ் படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, சிரஞ்சீவியின் சைரா படத்தில் சிறப்பு வேடம் ஏற்றுள்ளார். இந்தநிலையில், அனுஷ்காவின் சூப்பர் ஹிட் படமான அருந்ததி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாகவும், அதில் அனுஷ்கா நடித்த வேடத்தில் பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புட் நடிப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. இவர் தமிழில் ஏஞ்சல் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படியொரு செய்தி வெளியானதில் இருந்து, ‛அருந்ததி-2வில் அனுஷ்காவை தவிர இன்னொரு நடிகையை நினைத்தே பார்க்க முடியவில்லை. அவரை தவிர இன்னொரு நடிகையினால் அந்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்ய முடியாது' என்று சமூக வலைதளங்களில் அனுஷ்காவின் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.