Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வனிதா பிரச்சினையால் ஒரே நாளில் ஹீரோவான தர்ஷன்

13 ஜூலை, 2019 - 17:59 IST
எழுத்தின் அளவு:
Tharsan-becomes-hero

சென்னை: பிக்பாஸ் வீட்டில் வனிதாவை எதிர்த்து சண்டை போட்டதால், தர்ஷனுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் அதிகம் சண்டை போடுபவராக வனிதா விஜயகுமார் இருந்து வருகிறார். முதல் வாரம் தொடங்கி தற்போது வரை தன்னைத் தான் கேப்டனாக அவர் பாவித்துக் கொண்டிருக்கிறார். சமயங்களில் இது பிக் பாஸ் வீடா இல்லை வனிதாவின் வீடா என சந்தேகம் வருமளவுக்கு அவரது ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது.

தானாகவே வலியச் சென்று பல இடங்களில் பிரச்சினை செய்து வருகிறார். அதோடு பல பிரச்சினைகளுக்கு அவர் தான் துவக்கப்புள்ளியாகவும் இருக்கிறார். இதனால், வனிதா மீது மக்களிடையே வெறுப்பு அதிகரித்துள்ளது. பூனைக்கு யார் தான் மணி கட்டப் போகிறார்கள் என அவர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் தர்ஷன், வனிதாவை எதிர்த்துப் பேசி சண்டையிட்டார். இதனால் ஆவேசமான வனிதா, மைக்கை எல்லாம் கழட்டி வீசி கத்தினார். இந்தச் சண்டையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் அனைவருமே தர்ஷனுக்கே ஆதரவளித்தனர். பிக் பாஸ் வீட்டில் மட்டுமின்றி, வெளியே மக்களிடையேயும் தர்ஷனுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

வனிதாவுடனான இந்தச் சண்டையால் ஒரே நாளில் ஹீரோவாகி விட்டார் தர்ஷன். சமூகவலைதளங்களில் தர்ஷனின் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறிய பாத்திமா பாபு, இம்முறை பிக் பாஸ் டைட்டிலை வெல்வதற்கான வாய்ப்பு லாஸ்லியா அல்லது தர்ஷனுக்கே இருப்பதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சாக்ஷியால் ஜெயிலுக்குப் போன சேரன், கவின்சாக்ஷியால் ஜெயிலுக்குப் போன சேரன், ... ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா: போனி கபூர் விளக்கம் ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா: போனி கபூர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Endrum Indian - Kolkata,இந்தியா
17 ஜூலை, 2019 - 15:36 Report Abuse
Endrum Indian B யை P என்று படியுங்கள் அதன் உண்மை அர்த்தம் தெரியும். இது சீரியல் எஸுத்தளர் என்ன எழுதி டைரக்டர் என்ன சொல்கிறார்களோ அப்படி நடிக்கிறார்கள், இது ஒன்றும் நிஜமாக நடக்கும் நிகழ்வு இல்லை. இதன் பெயர் தான் மாயா என்பது இது தெரியாமல் பிக் பாஸ் என்றால் ஏதோ பெரிய உண்மையான நிகழ்வு போல???? வேலையத்த பசங்கள் பெண்கள் தான் இதை பார்த்து ஆகா ஓகோ காரம் இசைப்பர் .
Rate this:
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
17 ஜூலை, 2019 - 13:09 Report Abuse
Muthu Kumarasamy தயவு செய்து பிக் பாஸ் பற்றிய செய்திகளை பத்திரிகைகள் வெளியிடவேண்டாம். பிக் பாஸ் ஒரு தேவை இல்லாத வக்கிரமான நிகழ்ச்சி.
Rate this:
GBR -  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2019 - 10:07 Report Abuse
GBR Ban this program first. They are not cultured enough to behave properly to public or any common people
Rate this:
sangam - Nellai,இந்தியா
14 ஜூலை, 2019 - 07:31 Report Abuse
sangam அவ வில்லி வேடம் நடிக்க ட்ரைனிங் எடுக்குறா நீங்க என்னடான்னா அதை நிசம் என நம்பி ஐயோ ஐயோ சிப்பு சீப்பா வருது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in