Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் சங்க தேர்தலிலும் அரசியல் : அமீர் அணி விலகல்

13 ஜூலை, 2019 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Director-Ameer-team-boycott-Tamil-Cinema-Directors-Union-Election

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு வருகிற 21ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அமீர் தலைமையில் ஒரு அணியினர் போட்டியிட்டனர். அவர்களில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.பி.ஜனநாதனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒட்டு மொத்தமாக அமீர் அணியினர் போட்டியிலிருந்து விலகி உள்ளனர். இதுகுறித்து அமீர் அணி விடுத்துள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் 2019ம் ஆண்டு தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவ,ர் இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு முறையே, எஸ்.பி.ஜனநாதன், அமீர், கரு.பழனியப்பன், வெற்றிமாறன், சமுத்திரகனி, பாலாஜி சக்திவேல், செந்தில்குமார், ஜெகன்நாத், அஸ்லம், நாகேந்திரன் ஜெகதீசன், பாலமுரளி வர்மன், விருமாண்டி, திருமுருகன் உள்ளிட்ட இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் அணி போட்டியிட முடிவு செய்து மனுதாக்கல் செய்தோம்.

இறுதி வேட்புமனு பரிசீலனையில் ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சட்ட விதிகளுக்குப் புறம்பாக திட்டமிட்டு தேர்தல் அதிகாரி சில பொய்யான காரணங்களைக் காட்டி நிராகரித்துவிட்டார். அதற்கான காரணத்தை கேட்டபோது ஜனநாதனின் கோரிக்கை நியாயமானதுதான், இருந்தாலும், அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறேன் என்று கடிதம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு தேவை என்றால் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வாய்மொழியாகவும் கூறிவிட்டார்.

நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாகவும், பதவிக்கு போட்டியிடும் அரசியல் நபர்களுக்கு துணையாகவும் இருக்கும் அதிகாரியை கொண்டு நடைபெறப்போகும் இந்த தேர்தலில் பங்கு பெறுவது என்பது எங்கள் சங்கத்திற்கும், திரைத்துறைக்கும் எந்த நன்மையும் பயக்காது என்ற காரணத்தால் அமீர் தலைமையிலான இயக்குனர்கள் மற்றும் இணை துணை உதவி இயக்குநர்கள் அனைவரும், போட்டியிடும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவது என்று முடிவெடுத்து தேர்தல் அதிகாரியிடம் விலகல் கடிதம் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'தலைவி' ஜெயலலிதாவுக்காக பரத நாட்டியம் கற்கும் கங்கனா'தலைவி' ஜெயலலிதாவுக்காக பரத ... தமிழில் வெளிவரும் தி பேட்ரியாட் தமிழில் வெளிவரும் தி பேட்ரியாட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

rishi - varanasi,இந்தியா
13 ஜூலை, 2019 - 13:30 Report Abuse
rishi தேச விரோத இந்து விரோத கும்பல்
Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
13 ஜூலை, 2019 - 11:08 Report Abuse
Tamilachi அமீர் குரூப்ல இருக்கறவங்க பூரம் தமிழ் தேசியம்னு பேசிட்டு தெரியற தீவிரவாத பிரிவினைவாத குரூப்ஸ்....இவங்க நிக்காததே நல்லது...
Rate this:
deepak - chennai,இந்தியா
13 ஜூலை, 2019 - 10:44 Report Abuse
deepak ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள் பேசும் பேச்சை பாருங்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in