Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தலைவி' ஜெயலலிதாவுக்காக பரத நாட்டியம் கற்கும் கங்கனா

12 ஜூலை, 2019 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Kangana-learning-bharatanatyam-for-Jayalalitha-biopic

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் நடிப்பதற்காக பரதநாட்டியம் கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பல இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அவர்களில் ஏ.எல்.விஜய்யும் ஒருவர். அவர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை 'தலைவி' என்ற பெயரில் படமாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர். தற்போது பாலிவுட்டில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், தலைவி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கிறார். இப்படத்திற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் வேடத்திற்கு கங்கனா சரியான தேர்வு இல்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. ஆனபோதும், ஜெயலலிதாவாக நடிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டார். இன்னும் மூன்று மாதங்களில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால், தனது எடையை மேலும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கங்கனா.

அதோடு, கடந்த சில நாட்களாக அவர் பரதநாட்டிய வகுப்புகளுக்கும் செல்லத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா தன் சிறு வயதில் இருந்தே முறைப்படி பரதம் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, படத்தில் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக பிரதிபலிக்க கங்கனாவும், பரதம் கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர தமிழ் மொழி உச்சரிப்புக்காகவும் அவர் தனிப் பயற்சி பெற்று வருகிறார். ஜெயலலிதா தன் சிறு வயதை பெரும்பாலும் மைசூரில் கழித்ததால், தலைவி படப்பிடிப்பு மைசூரில் அவரது சிறுபிராயத்தின் காட்சிகளில் இருந்து தொடங்குகிறது.

வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் முதல் கட்டப் படப்பிடிப்பில், ஜெயலலிதாவின் இளமைக்கால நிகழ்ச்சிகள் துவங்கி அவர் சினிமாவில் அறிமுகமாவது வரையிலான காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவிக்கு சம்மதம் சொல்வாரா ஐஸ்வர்யாராய்?சிரஞ்சீவிக்கு சம்மதம் சொல்வாரா ... இயக்குனர் சங்க தேர்தலிலும் அரசியல் : அமீர் அணி விலகல் இயக்குனர் சங்க தேர்தலிலும் அரசியல் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
13 ஜூலை, 2019 - 16:38 Report Abuse
Vasudevan Srinivasan செய்தியெல்லாம் இருக்கட்டும் கங்கனா அவர்களின் வேறு புகைப்படம் கிடைக்கவில்லையா கன்றாவியா இருக்கு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in