அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
கமர்சியல் மற்றும் பிரம்மாண்டம் இரண்டையும் கலந்து விறுவிறுப்பாக படம் எடுக்கக்கூடிய சில இயக்குனர்களில் கே.வி.ஆனந்தும் ஒருவர். தற்போது சூர்யாவையும் மோகன்லாலையும் இணைத்து காப்பான் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் பிரதமர் கதாபாத்திரத்திலும், சூர்யா அவரது மெய்க்காப்பாளனாக அதிரடிப்படை வீரர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்தபபடத்தில் மோகன்லால் பிரதமர் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவருக்கு சண்டைக்காட்சிகள் இருக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்திற்கு தனது முதல் சாய்ஸாக இருந்தவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் என கூறியுள்ளார் இயக்குனர் கேவி.ஆனந்த். ஆனால், தொடர்ந்து அவர் பிஸியாக நடித்து வந்ததால் அவரது கால்ஷீட் கிடைக்காத நிலையில் அவருக்கு பதிலாக மோகன்லாலை தேர்வு செய்தாராம் கேவி ஆனந்த்.