Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட நடிகர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் : நடிகை விஜயலட்சுமி கதறல்

12 ஜூலை, 2019 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Please-save-me-from-Kannada-actors-says-Actress-Vijayalakshmi

சென்னை: தமிழ் பெண் என்ற காரணத்தால், பெங்களூரில் சிக்கி அவதிப்படுவதாக, நடிகை விஜயலட்சுமி, திடீர் புகார் தெரிவித்துள்ளார்.

விஜய், சூர்யா நடித்த, ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், விஜயலட்சுமி. சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்டுள்ள, வீடியோ பதிவு: தமிழில், சினிமா வாய்ப்பு இல்லாததால், பெங்களூரு வந்தேன். இங்கு வந்து, இரண்டு படத்தில் நடித்தேன். அதன்பின், கன்னட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வற்புறுத்தினர்.

மருத்துவமனை
உடல்நிலையை காரணம் காட்டி மறுத்து விட்டேன். ஒரு கட்டத்தில், உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில், இரண்டு மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நடிகர் சுதீப் உதவினார். இதற்கிடையில், உடல்நிலை மோசமாகி, அங்கிருந்து, வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ரவிபிரகாஷ் என்ற கன்னட நடிகர், எனக்கு, 1 லட்சம் ரூபாய் கொடுத்து, உதவி செய்தார். அதன் காரணமாக, அவர், என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அதனால், அவர் மீது புகார் கொடுத்தேன்.

இதையடுத்து, எனக்கு அதிகம் செலவு செய்ததாகவும், என் சிகிச்சை பற்றியும் தவறான தகவல்களை, அவர் பரப்பினார். நான் தெரிவித்த புகாரில், அவர் மீது, போலீசில் வழக்குப்பதிவு செய்தனர்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையுலகிலும், என்னை பற்றி, அவர் தவறாக சித்தரித்து உள்ளார்.

கஷ்டம்
இப்போது, நான் வீடு கூட இல்லாமல், ரொம்பவே கஷ்டப்படுகிறேன். இரண்டு வாரத்திற்கு முன், என்னை கைது செய்வதற்கு முயன்றனர். தமிழ் பெண் என்பதால், என்னை அதிகம் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். புகாரை கூட, கன்னடத்தில் எழுதி வரும்படி சொல்கின்றனர். நிறைய தமிழர்கள், இங்கு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்; அது வெளியே தெரிவதில்லை.

தமிழ் பெண்
இந்த ஊரில் சிக்கி, ரொம்பவே கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன். நான் மீண்டும், சென்னை திரும்ப வேண்டும். நான்பட்ட கடன், 1 லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும். தமிழ் திரை உலகினர், எனக்கு உதவி செய்ய வேண்டும். இங்குள்ள கன்னட நடிகர்கள், போலீசார், வழக்கறிஞர் என அனைவரும், என்னை தமிழ் பெண் என்ற ஒன்றை கூறியே, சிரமப்படுத்துகின்றனர்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம்இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் யூ-டியூப் சேனல் தொடங்கியது கவிதாலயா நிறுவனம் யூ-டியூப் சேனல் தொடங்கியது கவிதாலயா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

PANDA PANDI - Aththipatti,இந்தியா
14 ஜூலை, 2019 - 18:40 Report Abuse
PANDA PANDI 150 ரூபா கொடுத்து ட்ரெயின் ஏறி வாம சென்னைக்கு. மத்ததை பிறகு பார்ப்போம் எப்படி சொல்லிப்புட்டு அங்கேயே இருந்தால் விளைவு அதிபயங்கரமாக இருக்கும். 150 கும் வழி இல்லைனா WiTHOUT வாம. சென்னை யில் ஒண்ணா ஒன்னும் செய்யமாட்டாங்க. இல்லாட்டி இப்படி செய்யுங்களேன் குழந்தை தெய்வத்திடம் வேண்டி வழிபடுங்கள். தீர்வு நிச்சயம்.
Rate this:
skv - Bangalore,இந்தியா
14 ஜூலை, 2019 - 15:51 Report Abuse
skv<srinivasankrishnaveni> இவளுக்கு பிரெண்ட்ஸ் இல்லியா ஓர் இன்லாஸ் இல்லியா கணவன் இல்லியா ஒரே பொண்ணாவா இருக்கா , வயதாயிட்டு கன்னடம் சென்று நான் கன்னடம் பேச கத்துண்டேன் படிக்கவும் ட்ரை பண்ணேன் ஒரே அலையங்களாயிருக்கு கத்துக்க முடியலே நடிப்புதான் இவளின் ஜோலின்னா கத்துண்டேதான் அவனும் பாக்கவும் சுமித்ரா போலவே இருக்கா . உதவிய நடிக்காலும் ஆண்களாச்சே கண்ணகிக்கு கேக்க அவளையே கேக்குறானுகளா
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
13 ஜூலை, 2019 - 05:02 Report Abuse
TAMILAN தமிழ் நாட்டில் ஏன் கன்னட நடிகர்களை அனுமதிக்கின்றோம் (ரஜினி முதல் , பிரகாஷ் ராஜ் , அர்ஜுன் மற்றும் முரளியின் மகன் அனைவரையும் இங் கிருந்து விரட்ட வேண்டும்),
Rate this:
srinivas pandyan - toronto,கனடா
13 ஜூலை, 2019 - 00:44 Report Abuse
srinivas pandyan காளியம்மாள் இப்ப பட்டுச்சேலைகளில் காடசி tharukirar. வசதி வாய்ப்பு அப்படி. இலங்கை தமிழன் இருக்கும்வரை சீமான் காட்டில் மழை. சாட்டை துரைமுருகன் ஒரு thelungar. வைக்கோவின் uravinar. லியாக்கத் அலிகான் ஒரு கட்சி மாறி. இடும்பாவனம் கார்த்திக் உனக்கு உதயநிதி வருகையால் காய்ச்சல்
Rate this:
srinivas pandyan - toronto,கனடா
13 ஜூலை, 2019 - 00:19 Report Abuse
srinivas pandyan சீமான் மனைவியின் தாயார் ஒரு தெலுகு பெண். அப்படியானால் இவருடைய பிள்ளை தெலுங்கரே . இவருடைய மாமனார் காளிமுத்துவின் படம் இவருடைய படம் நாம் தமிழர் paமேடைகளில் வைக்கப்படத்தை பெற்றி என்ன sollkirar. இவருடைய மைத்துனர் மதுரை பாராளுமன்ற வேட்பாளர் .காளியம்மாள் பட்டுசேலைகளில் காட்சிதறுகிறார் இந்திய வரும் இலங்கைத்தமிழர் வழங்கும் பெரும்தொகை இவருக்கும் இவருடைய எடுபிடிகளுக்கும் போகிறது
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in