Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போதையில் யாஷிகாவுக்கு லிப்லாக் கொடுக்கும் நண்பர்.. வைரலாகும் வீடியோ

11 ஜூலை, 2019 - 20:57 IST
எழுத்தின் அளவு:
Yashika-lip-lock-video-goes-viral

சென்னை: லைவ் சாட்டிங் செய்து கொண்டிருந்த யாஷிகாவுக்கு ஆண் நண்பர் ஒருவர் லிப்லாக் கொடுத்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்பட சில படங்களில் நடித்திருந்தபோதும், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே இன்னும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நடிகை ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகாவும் நெருங்கிய தோழிகள் ஆகினர். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போதும் இவர்களது நட்பு இன்றளவும் தொடர்கிறது. தற்போது இருவருமே பிசியாக படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் ஓராண்டு நிறைவடைந்ததை, கடந்த மாதம் இருவரும் சேர்ந்து தனியாகக் கொண்டாடினர். அப்போது அவர்கள் இருவரும் லைவ் சாட்டிங் செய்தனர். இருவருக்குமே சமூகவலைதளங்களில் அதிக நண்பர்கள் இருப்பதால், அந்த சாட்டிங்கில் ரசிகர்கள் அதிகம் பேர் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் மது போதையில் இருப்பது போல் இருக்கிறது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அப்போது அதிரடியாக அந்த வீடியோவிற்குள் இரண்டு ஆண் நண்பர்கள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் யாஷிகாவிற்கு லிப்லாக் முத்தம் தருகிறார். அதனை ஐஸ்வர்யா சிரித்துக் கொண்டே பார்க்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் மஹத்தைக் காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் யாஷிகா. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னும், தொடர்ந்து மஹத்தை காதலிப்பேன் என்பது போல், கமல் முன்னிலையிலேயே கூறினார். தற்போது அவர்கள் இருவரும் புதுப்படம் ஒன்றில் ஜோடியாக நடித்து வருகின்றனர். விரைவில் மஹத்திற்கு, அவரது காதலி பிராச்சியுடன் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், யாஷிகாவிற்கு நண்பர் ஒருவர் முத்தமிடுவது போன்று வெளியாகியுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஆடை படத்திற்காக பக்தி பாடல் பாடிய பி.சுசீலாஆடை படத்திற்காக பக்தி பாடல் பாடிய ... த்ரிஷாவின் கர்ஜனை! த்ரிஷாவின் கர்ஜனை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

TechT - Bangalore,இந்தியா
17 ஜூலை, 2019 - 16:45 Report Abuse
TechT திருமணத்திற்கு பின்னும் காதலிப்பேன் என்று சொல்வார்...வேறென்ன...
Rate this:
mohan - chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 22:09 Report Abuse
mohan தினமலர் தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை போட வேண்டாம். ... நன்றி...
Rate this:
Ganthi - chennai,இந்தியா
14 ஜூலை, 2019 - 12:47 Report Abuse
Ganthi இதற்கு விஜய் டிவி நிர்வாகம் என்ன சப்ப கட்டு கட்ட போகிறது? ஒட்டு மொத்தமாக நம் நாட்டு கலாச்சாரத்தை இந்த டிவி குழி தோண்டி புதைத்து விட்டது?
Rate this:
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஜூலை, 2019 - 08:44 Report Abuse
மனிதன் verum liblockthaane athungalukku metera sarva saathaaranam neengal yennadanna liblockirkke ippadi alarureenga pongappa
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12 ஜூலை, 2019 - 03:26 Report Abuse
Mani . V உலக நாயகன், ஆஸ்கார் நாயகன் "ஏற்பாட்டில்" நடைபெறும் பிக் பாஸ் என்னும் கலாசார சீரழிவு நிகழ்ச்சியின் உதவியால் அடுத்த பரிணாமம் இது வாழ்த்துக்கள் உலக நாயகரே வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in