Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆடை படத்திற்காக பக்தி பாடல் பாடிய பி.சுசீலா

11 ஜூலை, 2019 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Legendary-singer-P-Susheela-sings-for-Amala-Pauls-Aadai

டைரக்டர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசரில் அமலா பால், ஆடையின்றி நடித்துள்ளது கடும் சர்ச்சையானது.

ஆடை படத்திற்காக பி.சுசீலா, பக்தி பாடல் ஒன்றை பாடி உள்ள தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், ரத்ன குமார். ஏற்கனவே இப்படத்தின் 2 பாடல்கள் மற்றும் தீம் டிராக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்து வெளியிட உள்ள சிங்கிள் டிராக் பாடல் பி.சுசீலா பாடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.


பி.சுசீலா பாடிய பக்தி பாடல் ரெக்கார்டிங் செய்யப்படும் போட்டோக்களை வெளியிட்டுள்ள ரத்ன குமார், ஆடை படத்திற்காக பி.சுசீலா பாடி உள்ளது தான் இப்படத்திற்கு கடவுளிடம் இருந்து கிடைத்துள்ள உண்மையான ஆசீர்வாதம் என குறிப்பிட்டார்.


இதே போன்றதொரு பாடலை 70 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக பி.சுசீலா பாடி உள்ளார் எனவும் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தங்கல் படத்தைப்போல் கென்னடி கிளப்தங்கல் படத்தைப்போல் கென்னடி கிளப் போதையில் யாஷிகாவுக்கு லிப்லாக் கொடுக்கும் நண்பர்.. வைரலாகும் வீடியோ போதையில் யாஷிகாவுக்கு லிப்லாக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sankar - new jersy,யூ.எஸ்.ஏ
12 ஜூலை, 2019 - 17:44 Report Abuse
sankar அமலா பால் பட பிட்டு படம் என்று கூட்டம் வராவிட்டால் . அதான் சுசீலா அம்மாவை பாட வைக்கிறார்கள் .
Rate this:
Girija - Chennai,இந்தியா
12 ஜூலை, 2019 - 08:48 Report Abuse
Girija எங்கள் அலுவலகத்தில் ஒரு சம்பவம் நடந்தது கம்ப்யூட்டரில் சில ஆண்கள் போர்னோ படம் பார்ப்பதை சக பெண் ஊழியர்கள் என்னிடம் புகார் அளித்தனர் மேலும் அவர்கள் பேசும் போது கோட் வோர்ட் உபயோகிப்பதின் மூலம் மற்ற பெண்களை படத்தில் வரும் கேரக்டர்களுடன் ஒப்பிட்டு பேசுவது சிரிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். CCTV மற்றும் அவர்கள் பயன்படுத்தும் Laptop களை ஆய்வு செய்ததில் உண்மை என்று தெரியவந்தது. நான்கு ஆண்கள் முப்பது வயது முதல் நாற்பத்திஐந்து வயது வரை, முதல் விசாரணையில் அவர்கள் மறுத்து இல்லை என்று சாதித்தனர், ஆதாரங்களை காட்டியவுடன் இதெல்லாம் யாரோ emailலில் அனுப்பியது அதை தவறுதலாக திறந்து பார்த்தோம் என்றனர். கிட்டத்தட்ட ஆறுமாதம் இப்படியே தவறு செய்து கொண்டிருந்தீர்களா? ஏன் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை? இதுமாதிரியான email வந்தால் உடனே அதை அழித்துவிட வேண்டும் என்று நிர்வாக அறிவுறுத்தலை ஏன் செய்யவில்லை என்றதற்கு அவர்களிடம் இருந்து பதில் இல்லை, இதற்க்கு குறைந்தபட்ச தண்டனையே டிஸ்மிஸ் தான். கதறி கண்ணீர் விட்டனர் இதில் ஒருவன் குடும்பபாரத்தை சுமப்பவன், ஒருவனுக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருந்தது, மற்ற இருவர்க்கும் பத்து பன்னிரண்டு வயதில் பள்ளியில் படிக்கும் மகன் மகள் இருந்தனர். நிர்வாகம் சொன்னது உங்களை மன்னிக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்குள் உங்கள் குடும்பத்தை அழைத்து வாருங்கள் ஒரு தனி அறையில் அவர்கள் முன்பு நீங்கள் பார்த்து ரசித்த படங்களை நீங்களே போட்டு காட்டவேண்டும் என்றது. அதிர்ந்துவிட்டனர் நால்வரும், கதறினார்கள் ஒன்றும் நடக்கவில்லை, ஒரு வாரம் வாசலிலேயே உட்காரவைக்கப்பட்டனர், கண்ணீர்வடித்தனர், அலுவலகம் முழுவதும் விஷயம் பரவியது மிகுந்த அவமானம் அடைந்தனர். கடைசியாக அவர்கள் காமெண்ட் அடித்த பெண்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அந்தப்பெண்களும் நிர்வாகத்திடம் தண்டனையை குறைத்து மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தனர். தண்டனை திருந்துவதற்கே அன்றி ஒருவரின் வாழ்வை அழிப்பதற்கில்லை என்று அப்பெண்கள் கருணை காட்டியதால் நிர்வாகம் தேவைப்பட்ட அணைத்து கடிதங்களையும் இருதரப்பிடமும் பெற்றுகொண்டு மீண்டும் அவர்களை பணியில் சேர்த்து கிரேடை குறைத்து மூல்லைக்கு ஒருவராக அந்த நால்வரையும் தூக்கியடித்தது. இந்த பெண்களின் போட்ட பிச்சையால் அந்த நால்வரும் தப்பி பிழைத்தனர் இன்றுவரை பணியில் உள்ளனர். பெண் என்பவள் அன்னையின் வடிவம் தெய்வத்தின் சமம். தாய்க்கு பின் தாரம் என்பது எதுகை மோனை அல்ல, ஒரு பெண்ணால் வம்சம் தழைக்கிறது, பெருமையும் சிறுமையும் மனைவி என்னும் பெண்ணால் தான் ஒரு குடும்பத்திற்கு உண்டாகிறது. பெண்ணை எல்லை மீறிய காட்சி பொருளாக சித்தரிப்பது தன் வினை தன்னை சுடும் என்கிற வாய் மொழி போல
Rate this:
Girija - Chennai,இந்தியா
11 ஜூலை, 2019 - 17:58 Report Abuse
Girija வருத்தம் அளிக்கிறது சுசிலா இவர்கள் படத்திற்கு பாடியது. இப்படி ஒரு படம் நாட்டிற்கு தேவையா? நடிகை தயார் என்றாலும் இது தர்மமா?
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
11 ஜூலை, 2019 - 15:25 Report Abuse
jayanantham செவிமடுக்க தயாராக உள்ளோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in