Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கொத்தனார் வேலையின் சிரமங்களை உணர்ந்த பிஜூமேனன்

11 ஜூலை, 2019 - 14:33 IST
எழுத்தின் அளவு:
bijju-menon-feels-building-workers-pain

மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வில்லன், குணச்சித்திர நடிகர் என்கிற அளவில் மட்டுமே நடித்து வந்த நடிகர் பிஜூமேனன் 'வெள்ளிமூங்கா' என்கிற படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அதைத் தொடர்ந்து தனி ஹீரோவாகவும், இரண்டு ஹீரோக்கள் கதையிலும் மற்றும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் பிஜூமேனன். அதேசமயம் பிஜூமேனன் நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் சரியாக வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் பிஜூமேனன் கதாநாயகனாக நடித்துள்ள 'சத்யம் பறஞ்சா விசுவாசிக்குவோ' (உண்மையை சொன்னா நம்புமோ) என்கிற படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் முதன்முதலாக கொத்தனார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிஜூமேனன். இவருக்கு ஜோடியாக ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு திரையுலகில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ள சம்விருதா சுனில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்ட பிஜூமேனன் கொத்தனார் வேலையில் இவ்வளவு சிரமங்கள் இருப்பதை இந்த படத்தில் நடித்தபோதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன்” என கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பார்வதி படங்களுக்கு இப்படி ஒரு ராசியா ?பார்வதி படங்களுக்கு இப்படி ஒரு ... பஹத் பாசிலின் புதிய படம் மாலிக் பஹத் பாசிலின் புதிய படம் மாலிக்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rojarose - Chennai,இந்தியா
11 ஜூலை, 2019 - 17:02 Report Abuse
Rojarose தினமலர் தயவு செய்து மலையாள சினிமா செய்திகளை நிறுத்துங்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in