பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில், மதுமிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், வனிதா ஆகியோர் உள்ளார்கள். அவர்களில் யார் காப்பாற்றப்பட வேண்டும், யார் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கான ஓட்டுக்களை நேயர்கள் அளிக்க வேண்டும்.
வனிதா நாமினேஷனில் வந்தார் என்று அறிவிக்கப்பட்ட நிமிடத்திலேயே சமூக வலைத்தளங்களில் அவர் டிரென்டிங்கில் வந்தார். அவரை இந்த வாரம் நாம் வெளியேற்ற வேண்டும் என பல ரசிகர்களும் வனிதாவின் பெயரை முன்மொழிந்து டிவீட் செய்திருந்தார்கள்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ், வனிதாவிற்கு 'கொலையாளி' டாஸ்க் ஒன்றைக் கொடுத்து 'சாக்ஷி, மோகன் வைத்யா, ஷெரின், ரேஷ்மா' ஆகியோரைக் கொல்லச் சொன்னார். அதன்படி அந்தக் கொலைகளை வனிதா மிகச் சரியாகச் செய்துவிட்டார். பொதுவாக இப்படி ஏதாவது ஒரு டாஸ்க் கொடுத்து அதைச் செய்தவர் சரியாகச் செய்து வெற்றி பெற்றுவிட்டால் அவர்களை எலிமினேஷனிலிருந்து பிக் பாஸ் காப்பாற்றுவது வழக்கம்.
அதன்படி, இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள வனிதாவை இந்த 'கொலையாளி' டாஸ்க் மூலம் பிக் பாஸ் காப்பாற்றிவிடுவார் என பல நேயர்கள் கூறி வருகிறார்கள். மேலும், முதல் வாரம் வீட்டை விட்டு வெளியில் வந்த பாத்திமா பாபு, கொடுத்த பேட்டிகளில் வனிதா நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் இருப்பார், அவர் இல்லையென்றால் சண்டையே நடக்காது, அவர் இருப்பது நிகழ்ச்சிக்குத் தேவையான ஒன்று என்று கூறியுள்ளார்.
எனவே, இந்த வாரம் வனிதா, பிக் பாஸால் காப்பாற்றப்படுவார் என்றே பலரும் நினைத்து வருகிறார்கள். அவருக்குப் பதிலாக மோகன் வைத்யா வெளியேற்றப்படலாம் என்றும் சொல்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று இரண்டு நாளில் தெரிந்துவிடும்.