Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிக் பாஸ் 3' - சிகரெட் பிடிக்கும் பெண் போட்டியாளர்கள்

10 ஜூலை, 2019 - 15:55 IST
எழுத்தின் அளவு:
Women-contestant-smoking-in-Biggboss-3

'பிக் பாஸ் 3' வீட்டிற்குள் சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்காக சிகரெட் பிடிப்பதற்கென்று தனி இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கார்டன் பகுதியில், சிம்னி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தை பல காமிராக்களும் படம் பிடிக்கும்.

இதுவரையிலும் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளில் புகை பிடிக்கும் அந்த பகுதிக்குள் ஒரு ஆண் போட்டியாளரைக் கூடப் பார்க்க முடியவில்லை. மாறாக பெண் போட்டியாளர்களான அபிராமி, சாக்ஷி, ஷெரின், வனிதா ஆகியோரை அடிக்கடிப் பார்க்க முடிகிறது.

கடந்த வாரம் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் அவர்களில் ஒருவர் சிகரெட் பிடிப்பதை அப்படியே ஒளிபரப்பினார்கள். பொதுவாக சிகரெட் பிடிக்கும் காட்சிகளை டிவியில் ஒளிபரப்பினால் அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும். ஆனால், அப்படியான எந்த வாசகமும் இல்லாமல் அப்படியே ஒளிபரப்பானது.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியை குழந்தைகள், பெண்கள் ஆகியோர் அதிகம் பார்க்கிறார்கள். பெண்கள் சிகரெட் பிடிப்பதையோ, மது குடிப்பதையோ நமது சமூகம் வரவேற்பதில்லை. அப்படியிருக்கையில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்பவர்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தாலும், அதற்காக ஒரு இடம் ஒதுக்குவது தேவையற்றது. அதை படம் பிடித்து அப்படியே ஒளிபரப்புவதும் தவறு.

கடந்த இரண்டு சீசன்களிலும் அந்த சிகரெட் பிடிக்கும் அறை மறைமுகமாக இருந்தது. பெண்கள் அந்தப் பக்கம் போனால் கூட அதைக் காட்ட மாட்டார்கள். ஆனால், இந்த 3வது சீசனில் சிகரெட் பிடிப்பதையே காட்டிவிட்டார்கள்.

நீச்சல் குளத்தில் தண்ணீர் வேண்டமென்று கமல்ஹாசன் சொன்னதாக முதல் நாளே சொன்னார். அதுபோல புகை பிடிக்கும் பகுதியும் வேண்டாமென கமல்ஹாசன் சொல்வாரா ?.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
தனுசு ராசி, திகங்கனாவிற்கு ராசியாகுமா?தனுசு ராசி, திகங்கனாவிற்கு ... ஜுலை 12 போட்டியில் 7 படங்கள் ஜுலை 12 போட்டியில் 7 படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

skv - Bangalore,இந்தியா
15 ஜூலை, 2019 - 08:32 Report Abuse
skv<srinivasankrishnaveni> கேவலமான பயித்தியக்கார கூட்டங்களே இருக்குங்க உள்ளே அவ்ளோ ஆம்பளைங்க இடையே இப்படி கேவலமான உடைகளோட வரது கூச்சமாயில்லீங்களா இவளுக்கும் எல்லாமே SHEMLESS BEGGERSAA ஒரு பொண்ணு எப்போதும் அழுகை சிரிப்பெ வராதுபோல வனிதா செறியான குப்பத்து காரியாட்டம் பெபென்னு காத்திடு இருக்கா மொத்தத்துல கேவலமான ஒருசோ நான் பார்ப்பதே இல்லீங்க ஆனால் அப்பப்போ டிவிலே விளம்பரம்கே காட்டுறாங்களே அதுலேந்துவந்த அபிப்பிராயமேதான், ஆமாம் எல்லா சீரியல்கள்லேயும் எப்படீங்க வீட்டுக்குள்ளேயும் அவ்ளோ லிப்ஸ்டிக் ஈஷிண்டு நிக்குறாங்க பாரதி கண்ணம்மான்னு ஒண்ணுவாராது நன்னாயிருக்குமோன்னுபார்த்தேன் கன்றாவியாயிருக்கு மாமியார்க்கொடுமை போறதுக்கு ஒரு ஆம்பளையை மூன்றுபேரு லவ்வு பன்ராலுக்கலாம் அசிங்கமாயிருக்கவே ஸ்டாப்பேட்.
Rate this:
Krizzzz - Kovai,இந்தியா
13 ஜூலை, 2019 - 11:57 Report Abuse
Krizzzz மானம் கெட்ட ஒரு நிகழ்ச்சி அதை பார்ப்பதற்கும் , வாக்கு அளிப்பதற்கும் மக்கள்.
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
12 ஜூலை, 2019 - 11:24 Report Abuse
S.Ganesan மிகவும் கேவலமான ஒரு நிகழ்ச்சி இது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11 ஜூலை, 2019 - 10:30 Report Abuse
Mirthika Sathiamoorthi புகை பிடிக்கும் பகுதியும் வேணாம்ன்னு கமல் சொல்லணும்ன்னு எதிர்பாக்கும் நீங்க என்ன சொல்லவறீங்க? சிகரெட் பிடிப்பதே தவறுன்னு சொல்றீங்களா? இல்லை பெண்கள் சிகரெட் பிடிப்பது தவறுன்னு சொல்ல வாறீங்களா? புகைபிடிக்கும் பகுதியை நீக்க சொலவதற்கு பதில் தமிழகம் முழுவதும் சிகரெட் தடைசெய்ய வேண்டும் என சொல்ல சொல்லி கமலை வற்புறுத்தலாமே? டிவி யில் பெண்கள் குழைந்தைகள் பார்ப்பாங்கன்னு கவலைப்படும் நாம் பொது இடங்களில் புகைபிடிப்பதை கண்டுக்காம போறோமே ஏன்? அங்கெல்லாம் குழந்தைகள் பார்க்காதா? புரியும் படி சொல்லுங்க. ப்ளீஸ் .. பிக் பாஸ் 2 வில் மதுமிதாவின் கருத்தைத்தான் பொன்னம்பலமும் சொன்னார்.. அப்போ ஆனந் வைத்யநாதனின் பெண் உரிமைக்கு கமலின் கருத்து, பெண்கள் ஆணுக்கு நிகராய் போட்டியிடுங்கள் அதை குடிப்பதாலும் சிகரெட் பிடிப்பதிலும் காட்டாதீர்கள் சொன்னாரே ....நீங்க என்ன எதிர்பாக்குறீங்க சீசன் சீசன் கருத்து சொல்லிகிட்டே இருக்கணுமா? வர்ற போட்டியாளரிடம் சிகரெட் பிடிக்காதீங்க இப்படி டிரஸ் போடாதீங்கன்னு கண்டிஷன் வீட்டுக்கு வருவதற்கு முன் சொல்லனுமா? வீட்டிற்குள் வந்தபின் சொல்லனுமா? வீட்டிற்குள் வருவதற்கு முன் சொன்னால்...யார் வருவார்? இந்த வீட்டில் இருந்து கிடைத்த பிரபலத்தை பயன்படுத்த துடிக்கும் பெண்களில் யாராவது இப்படி ஒரு நிபந்தனைக்கு பின்னாலும் போட்டிக்கு வருவாங்க? ஒன்னு பண்ணலாம், ஜென்ட்ஸ் ஹாஸ்டெல்., லேடீஸ் ஹாஸ்டல் மாதிரி பெண்கள் மட்டும் பங்கு பெரும் பிக் பாஸ்.... அதுவும் பெண்கள் எந்த மோசமான பழக்கமும் இருக்கக்கூடாது , எல்லோரும் சேலைதான் உடுத்தவேண்டும், யாரும் இரவில் நைட்டி கூட போடக்கூடாது வார்த்தைகளில் கண்ணியம் இருக்கவேண்டும் சூரியன் உதிக்குமுன்னே எழுந்து குளித்து மங்கலக்கிரமாய் நெத்தியில் திலகமிட்டு பூஜைகள் செய்து அன்றய நாளை தொடங்கவேண்டும், உங்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் கோலம் போடுவது, கூடைபந்தாடுவது ( சேலையுடன் ) பல்லாங்குழி ஆடுவது ஊஞ்சல் ஆடுவது, சமைப்பது, பாரதம் பாட்டு போட்டிகள் நடத்தி வெற்றியாளரை தீர்மானிப்பது...எப்படியிருக்கும் இந்த நிகழ்ச்சி? கலாசார சீரழிவில்லாமல் தரமானதாக இருக்கும் அல்லவா? எப்புடி இருக்கும் தெரியுமா? ராமாயணத்தில் எல்லோரும் ராமரே இராவணன் உட்பட. ( இதைத்தான் திரு மணி அவர்களும், திரு தமிழ் செல்வனும் விரும்பு கின்றனர் )....நல்லாத்தான் இருக்கும் பாக்கத்தான் ஆள் இருக்காது(மணி தமிழ் செல்வனை தவிர) நீங்கள் எதிர்பாக்கும் அனைத்தும் சீரியல்கள் செய்கின்றன...பெண்கள் புகை பிடிக்கும் காட்சிகள் இல்லை, ஆபாச உடை அணிவதில்லை, படுத்துறங்கும் காட்சியானாலும், காலையில் விழித்து எழும் காட்சியானாலும், சரி ஒவொரு காட்சியிலும் தலைநிறய பூவுடனும், முழு ஒப்பனையுடனும் தானே பெண்கள் வருகின்றனர்..நம் கலாச்சார பாதுகாப்புடன் காட்சிகள் உருவாக்கப்படுகின்றன, பெண்கள் குழந்தைகள் பார்க்கும் வகையில்.. அதை நாம பாராட்டுவதில்லையே ஏன் ? பிக் பஸ்ஸுடன் ஒப்பிடும்போது சீரியல் எவ்வளவோ தேவலை சரிதானே? மாறாக சீரியல்களை கழுவி ஊதுகிறோமே...புரியலை..குத்தம் சொல்வதற்கே பிறப்பெடுத்தவர்களா நாம? மிக பெரிய வெற்றிபெறும் எந்த பொது நிகழ்ச்சியும் கடுமையான விமர்சனத்தை சந்திக்காமல் இருந்ததில்லை....டிவி நிகழ்ச்சிகள் எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது.. சமூக அக்கறையுடன் செயல்படும் நிகழ்ச்சிகள் பல உள்ளன உதாரணத்துக்கு செய்தி சேனல்கள்.. மக்களை அதை பாக்க ஊக்குவிக்கவேண்டும், மக்கள் செய்திசேனல்களை மட்டும் பார்க்கும் நிலைவந்தால் பிக் பாஸ் காணாமல் போய்விடும்....பிக் பாஸ் படுதோல்வியடைய ஒரேவழி மக்களை செய்தி சேனல் பாக்க ஊக்குவிப்பதுதான்... இல்லையென்றால் வேறேதாவது தரமான கலாசார சீரழிவில்லாத ஒரு புது நிகழ்ச்சி வரவேண்டும் அதை மக்கள் வலுக்கட்டயாமாக பார்க்க வைக்கவேண்டும்...இதைவிட மிகச்சிறந்த வழி எல்லார்வீட்டு டிவி பெட்டியை உடைத்து விடவேண்டும்...இப்போ எப்படி கலாச்சார சீரழிவுபண்ணும் இந்த தரமற்ற நிகழ்ச்சியை பாப்பாங்க?
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
11 ஜூலை, 2019 - 10:04 Report Abuse
pattikkaattaan இந்த மாதிரி கருமம் பிடித்த சீரழிவு நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் பார்க்கிற நம் மக்களை என்னவென்று சொல்வது ?.. தயவுசெய்து குழந்தைகளை பார்க்க அனுமதிக்காதீர்கள் பெற்றோர்களே .. அவர்கள் கெட்டுப்போக நீங்களே காரணம் ஆகிவிடுவீர்கள் ..
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in