'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
தர்மதுரை படத்திற்கு பிறகு யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படம் கூர்கா. இதில் அவருக்கு ஜோடியாக கனடா நாட்டு மாடல் அழகி எலிசா எர்ஹாட் நடிக்கிறார். இவர்களுடன் சார்லி, ஆனந்தராஜ், மனோபாலா, ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். 4 மங்கீஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளிவருகிறது. 100 படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். படத்தின் கதை இதுதான்.
யோகி பாபுவுக்கு போலீசாக வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவர் உடல்வாகுவால் அவரால் அந்த வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் போலீசின் சாயல்கொண்ட கூர்கா வேலைக்குச் செல்கிறார். மனோபாலாவின் கூர்கா நிறுவனத்தின் ஊழியர் ஆகிறார்.
ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் அவரது செல்ல நாயுடன் பணியை தொடங்குகிறார். அந்த மாலை ஒரு தீவரவாத கும்பல் சுற்றி வளைக்கிறது. தனது புத்தியாலும், தனது செல்ல நாயின் துணை கொண்டும். அந்த தீவிரவாதிகளிடமிருந்து ஷாப்பிங் மாலையும், மாட்டிக் கொண்ட மக்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இதனை காமெடி கலந்து சொல்கிறது படம்.