ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இதற்கு முந்தைய இரண்டு சீசன்களிலும் கூட இப்படி நடக்கவில்லை. ஆனால், இந்த மூன்றாவது சீசனில் முதல் இரண்டு வாரங்களில் தலைவர்களாக இருந்தவர்கள் மூன்றாவது வாரத்திலேயே 'எலிமினேஷனுக்காக', 'நாமினேட்' செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமானது.
முதல்வார தலைவராக இருந்த வனிதா, இரண்டாவது வார தலைவராக இருந்த மோகன் வைத்யா இருவரும் நேற்று நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் போன வார நாமினேஷனில் இருந்த மதுமிதா, சரவணன், மீரா மிதுன் ஆகியோரும் இந்த வார நாமினேஷனில் சேர்ந்துள்ளார்கள்.
வனிதா, மீரா மிதுன், மதுமிதா ஆகியோரை தலா 7 பேர் நாமினேட் செய்துள்ளார்கள். வனிதா நாமினேஷனில் வந்ததுமே நேற்று இரவிலிருந்தே அவர் டுவிட்டர் டிரென்டிங்கில் வந்துவிட்டார். பலரும் இந்த வாரம் வனிதாவை வீட்டை விட்டு வெளியோற்றியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், வனிதா வீட்டை விட்டு வெளியில் வந்தால் வீட்டில் சண்டைகள் அதிகம் நடக்க வாய்ப்பில்லை. நடக்கும் பல சண்டைகளுக்கு அவர்தான் காரணமாக இருக்கிறார். எனவே, அவரை வீட்டைவிட்டு வெளியேற்றுவார்களா என்பது சந்தேகம்தான். எலிமினேஷனுக்காக அவர் அதிக ஓட்டு வாங்கினாலும் பிக் பாஸ் அவரைக் காப்பாற்றுவார் என நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.