Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களின் கேள்வியில் சிக்கித் தவித்த சமந்தா

09 ஜூலை, 2019 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Samantha-trolled-by-fans

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அதை இந்தியிலும் ரீமேக் செய்து இயக்கியுள்ளார் அந்தப் படத்தின் இயக்குனர் சந்திப் வங்கா ரெட்டி. சாஹித் கபூர் நடிப்பில் கபீர் சிங் என்கிற பெயரில் வெளியாகியுள்ள அந்த படம் அங்கேயும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.. இந்த நிலையில் ஒரு பேட்டியின்போது அந்த படத்தில் நாயகன் நாயகியை அறையும் காட்சிக்கு விளக்கமளித்த இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி, ஒரு ஆண் பெண்ணை அறைவது கூட காதலின் ஒரு வகையான வெளிப்பாடு தான் கூறியுள்ளார்..

இப்படி கூறியதற்காக அவருக்கு பல பக்கமிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இவர் பேசிய வீடியோ கிளிப்பை பாடகி சின்மயி தனது தோழியான நடிகை சமந்தாவின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்த சமந்தா, தான் ரொம்பவே அதிர்ச்சி அடைந்துள்ளதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் சமந்தாவின் இந்த கருத்தால் அதிர்ச்சியான அர்ஜுன் ரெட்டி பட ரசிகர்கள், சமந்தாவிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதில், “இதே அர்ஜுன் ரெட்டி படம் வெளியானபோது அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அந்த படத்தை வானளாவ புகழ்ந்தீர்கள் அப்போது அந்தப்படத்தில் இந்த காட்சி இடம்பெற்றது உங்கள் கண்களில் படவில்லையா..?.. இதேபோல நீங்கள் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும் ராம்சரண் உங்களது கன்னத்தில் அறைந்தார்.. நீங்கள் பதிலுக்கு அவருக்கு முத்தம் கொடுத்தீர்கள்.. அழகான ஒரு காதலின் வெளிப்பாடு என்று இந்த காட்சியை அனைவரும் சிலாகித்துப் பேசினார்கள்.. இதெல்லாம் சரி என்றால் நீங்கள் இப்போது இது தவறு என்பது போல பேசி இருப்பது உங்கள் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது” என விமர்சித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த சமந்தா, தான் படம் குறித்து எந்த விதமான கருத்தும் கூறவில்லை என்றும், இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி கூறிய கருத்திற்கு தான் பதில் கூறினேன்.. படத்திற்கான கருத்தையும் தனி மனிதரின் பேச்சுக்கான பதிலையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தம்பியுடன் பேசாதது ஏன்..? ; விஜய் தேவரகொண்டா விளக்கம்தம்பியுடன் பேசாதது ஏன்..? ; விஜய் ... சாலையோர குழந்தைகளிடம் சிக்கிய ரகுல் பிரீத் சிங் சாலையோர குழந்தைகளிடம் சிக்கிய ரகுல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in