Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம்பியுடன் பேசாதது ஏன்..? ; விஜய் தேவரகொண்டா விளக்கம்

09 ஜூலை, 2019 - 16:12 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda-replied,-why-he-did-not-speak-with-his-brother

கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய திரையுலகில் ஒரு முக்கியமான கதாநாயகனாக ரசிகர்களை வசீகரித்து இருப்பவர் விஜய் தேவரகொண்டா.. இவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் சினிமாவில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். இவர் அறிமுகமாகியுள்ள முதல் படமான 'தொரசானி' வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது.. இந்த படத்தில் நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

படத்தின் டீஸர், டிரைலர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் என கடந்த சில நாட்களாகவே ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டன. அவற்றை பிரபலங்கள் பலர் பாராட்டியபோதும், ஆனந்தின் அண்ணனான விஜய் தேவரகொண்ட மட்டும் தன் தம்பியின் படம் குறித்து எந்த ஒரு கமெண்ட்டுமே தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்தார்.. அதேசமயம் மற்ற சில நடிகர்களின் படங்களுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தது அவர் மீது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தொரசானி படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியல் யாருமே எதிர்பார்க்காத வகையில் கலந்து கொண்டு ஆனந்த அதிர்ச்சி அளித்தார் விஜய் தேவரகொண்டா. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா தன் தம்பியுடன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தான் பேசாமல் இருப்பது ஏன் என்கிற உண்மையையும் உடைத்தார்.

அமெரிக்காவில் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை பார்த்துவந்த ஆனந்த் தேவரகொண்டா, சினிமாவில் நடிப்பதற்காக அந்த வேலையை உதறிவிட்டு வருவதாக தனது அண்ணனிடம் கூறியுள்ளார்.. ஆனால் சினிமாவில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை எடுத்துக் கூறிய விஜய் தேவரகொண்டா அவரை அந்த வேலையில் தொடரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும் அவர் சொன்னதை கேட்காமல், ஆனந்த் தனது வேலையை விட்டுவிட்டு ஆந்திராவிற்கு வந்துவிட்டார்.. அதனால் தான் தனது தம்பியுடன் பேசுவதை கடந்த ஒரு வருடமாக நிறுத்தி இருந்தாராம் விஜய் தேவரகொண்டா. ஆனால் அண்ணனின் சிபாரிசு இல்லாமல் தானாகவே ஒரு பட வாய்ப்பையும் தேடி, கதாநாயகனாக நடித்து இன்று ரிலீஸ் வரை வந்துவிட்ட தனது தம்பி நடித்துள்ள படத்தை பார்த்து நெகிழ்ந்து போனதால் தான் இந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கு தான் வந்து கலந்து கொண்டதாக கூறினார் விஜய் தேவரகொண்டா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
படவிழாவில் டென்சனான சித்தார்த்படவிழாவில் டென்சனான சித்தார்த் ரசிகர்களின் கேள்வியில் சிக்கித் தவித்த சமந்தா ரசிகர்களின் கேள்வியில் சிக்கித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
12 ஜூலை, 2019 - 23:33 Report Abuse
Vanavaasam எபப்டியெல்லாம் கதி விடுறானுங்க .. இச்சே இந்த திறமை நமக்கு இல்லாமல் போச்சே
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
10 ஜூலை, 2019 - 04:27 Report Abuse
 nicolethomson எப்பா ஒரு படத்துக்கு கதைக்கரு கிடைத்து விட்டது
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
13 ஜூலை, 2019 - 19:36Report Abuse
sankarAmerica தம்பியின்சினிவில் ஸ்னே பண்ணி அண்ணன் பட வாய்ப்புகள் குறைந்து அண்ணா தம்பியை எதிரியாக நினைத்து தம்பியின் மனைவியை கைப்பற்ற முயற்சி செய்து அன்னா தம்பிகளே எதிரயாகை கிளைமாக்ஸில் தம்பி திரும்ப அமெரிக்கா செல்ல முடிவு எடுக்க அன்னான் திருந்தி இந்த சாதிக்கு காரணமான சினி உலக பிரமுகர்களை இப்போட்டு தள்ள பட சுபம் இருவரும் மீண்டும் திரைக்கு வந்து காலை பனி ஆற்ற எண்டு கார்டு அண்ணனாக அஜித் தம்பியா விஜய் . நான் ரெடி பிரோடுசேர் ரெடியா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in