Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யுவனுடன் இணைந்த இனியா

09 ஜூலை, 2019 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Iniya-team-with-Yuvan-for-album

தமிழில் சிறிய படங்களில் நடித்து வந்த இனியா, தேசிய விருது பெற்ற 'வாகை சூடவா' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் 'காபி', மலையாளத்தில் மம்முட்டியுடன் 'மாமாங்கம்', பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் 'தாக்கோல்' மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் துரோணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இசை மற்றும் நடனத்தில் ஆர்வம் மிக்க இனியா, மியா என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்ளவதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தைக் கற்றுக் கொடுத்து, அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார்.

இந்த இசை ஆல்பத்தை டிவோ மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ஹி1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா. இதுபற்றி இனியா கூறும்போது, “நான் ஒரு டான்சர் என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன்.. ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு உதவிய யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதல் வாரத்தில் ரூ.17 கோடி வசூலித்த சமந்தா படம்முதல் வாரத்தில் ரூ.17 கோடி வசூலித்த ... விஷ்ணு விஷால் இடத்தை விக்ராந்த் நிரப்புவாரா விஷ்ணு விஷால் இடத்தை விக்ராந்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in