800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா |
அருண் விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்த படம் தடம். மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். அருண் ராஜ் இசை அமைத்திருந்தார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரேதான் சினிமா சார்பில் இந்தர்குமார் தயாரித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியானது.
அருண் விஜய் இரட்டையர்களாக நடித்திருந்தார். ஒருவர் செய்யும், கொலை கொள்ளைகள் அடுத்தவர் மீது விழுகிற மாதிரியான கதை. தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. கிஷோர் திருமலை இயக்குகிறார். ராம் பொத்தினேனி அருண் விஜய் கேரக்டரில் நடிக்கிறார்.
ஸ்மிருதி வெங்கட் கேரக்டரில் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வித்யா பிரதீப், தான்யா ஹோப் நடித்த கேரக்டர்களுக்கு தேர்வு நடந்து வருகிறது. நிவேதா பெத்துராஜ் மெண்டல் மதிலோ, சித்ரலஹரி படங்கள் மூலம் ஏற்கெனவே தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.