ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
மாட்டுக்கார வேலன், ராமன் தேடிய சீதை, சிவகாமியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஜெயந்தி பிலிம்ஸ் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கி உள்ளது. அடுத்த தலைமுறையை சேர்ந்த நடராஜன் பௌவ் பௌவ் என்ற படத்தை தயாரித்துள்ளார். இதனை பிரதீப் கிளிக்கர் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இன்றைய குழந்தைகள் மனநிலையை பேசுகிற படம். குழந்தைகளின் கைகளில் செல்போன் வந்து விட்டபிறகு அவர்கள் இந்த சமூகத்தை எப்படி பார்க்கிறார்கள். பெற்றவர்கள் குழந்தைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதை பேசுகிற படம். படத்தில் பெங்களூர் சிறுவன் அஹாசன்தான் ஹீரோ. அவனுடன் 4 நாய்கள் நடித்திருக்கிறது. நாய்கள் குரைக்கும் சத்தமான பௌவ் பௌவ்தான் படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டிருக்கிறது.
படம் பல உலக படவிழாக்களில் திரையிடப்பட்டு விருது பெற்றிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் ரிலீசாகிறது என்றார்.