Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பக்ரீத்

07 ஜூலை, 2019 - 10:03 IST
எழுத்தின் அளவு:
bakrid-movie-to-be-release-on-bakrid

முன்னணி நடிகர்கள் நடித்த படம் வெளியாகும் தேதியில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிடவே முடியாது. காரணம்... சின்ன பட்ஜெட் படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது. அதையும் மீறி வெளியிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது.

இந்த நடைமுறை சிக்கல் காரணமாகவே முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் போட்டியில்லாமல் சோலோவாக களத்தில் இறங்கி காசை அள்ளி வருகின்றன. ஆகஸ்ட் 10 அன்று அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பக்ரீத்' படத்தை ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு ஒட்டகம் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் இப்படத்தை விஷாலின் முன்னாள் மானேஜரான எம்.எஸ்.முருகராஜ் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே சந்தானம் மிர்ச்சி சிவா நடித்த யா யா என்ற படத்தை தயாரித்தவர்.


பக்ரீத் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டநிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக சில மாதங்கள் காத்திருந்தார். இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதால், அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக தன்னுடைய பக்ரீத் படத்தை வெளியிட உள்ளார்.


நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் விக்ராந்த். விவசாயம் செய்வதை பெருமையாக நினைக்கும் விக்ராந்த் வாழ்க்கையில் ஒரு ஒட்டகம் குறுக்கிடுகிறது. அந்த ஒட்டகத்தின் வருகைக்கு பிறகு விக்ராந்த் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் 'பக்ரீத்' படத்தை சென்னை, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளனர்.


அஜித் நடித்த படம் வெளியாகும்போது பக்ரீத் படத்தை வெளியிடுவது ஏன்? படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வருகிறது. அதன் காரணமாகவே 3 நாட்கள் முன்னதாக படத்தை வெளியிட முடிவு செய்தாராம் முருகராஜ். செம டைமிங்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரிமீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை ... களவாணி-2 படத்துக்கு கடைசிநேர சிக்கல் ஏன்? களவாணி-2 படத்துக்கு கடைசிநேர சிக்கல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in