ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
சனில் காலத்தில் இயக்கத்தில் ஜெயராம், ஆத்மியா நடிக்கும் 'மார்கோனி மத்தாய்' மலையாளப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயராம் ஒரு செக்யுரிட்டி கதாபாத்திரத்திலும், நாயகி ஆத்மியா ஸ்வீப்பர் ஆகவும் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி ஒரு நடிகராகவே நடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், மலையாள நடிகர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று மல்லுவுட்டில் சொல்கிறார்கள்.
ஜெயராம், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளன. டிரைலரைப் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி படம் முழுவதும் வருவது போல இருக்கிறது. படத்தை தமிழ்நாட்டிலும் கண்டிப்பாக வெளியிடுவார்கள்.
இந்த வருடத்தில் தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் விஜய் சேதுபதி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் அறிமுகமாகும் 'சை ரா' அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.