சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தமிழில் 'பாபநாசம்' படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், அதன் பின் தமிழில் கார்த்தி, ஜோதிகா, நிகிலா விமல், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஊட்டியில் ஆரம்பமானது.
நிஜ வாழ்க்கையில் ஜோதிகாவின் மைத்துனரான கார்த்தி, இந்தப் படத்தில் ஜோதிகாவின் தம்பியாக நடிக்கிறார். 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக படத்தின் ஒளிப்பதிவாளரான ஆர்டி ராஜசேகர் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' இன்று திரைக்கு வந்துள்ளது. அடுத்து அவர் நடித்துள்ள 'ஜாக்பாட்' படம் வெளிவர உள்ளது. கார்த்தி நடித்துள்ள 'கைதி' அடுத்து வெளிவர உள்ளது. கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள பெயரிடப்படாத படம் வெளிவருவதற்குள் 'ஜாக்பாட், கைதி' ஆகியவை வெளிவந்துவிடும்.