புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க, கடந்த மே மாதம் 31ம் தேதி வெளிவந்த படம் 'என்ஜிகே'. அரைகுறையான அரசியல் படமாக வெளிவந்த அந்தப்படத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை.
வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தை இயக்கிய செல்வராகவனும் படத்தில் பல 'ஹிட்டன்' விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பொறுமையாகப் பார்த்தால்தான் புரியும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஆனால், ரசிகர்கள் அதைக் கேட்கத் தயாராக இல்லை.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான படம் சூர்யா நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது. சுமார் 50 கோடி வரை நஷ்டம் என்று கோலிவுட்டில் சொன்னார்கள்.
இப்போது 35 நாட்களிலேயே படத்தை அமேசானில் வெளியிட்டுவிட்டார்கள். 'என்ஜிகே' படத்தைத் தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இதற்கு முன் தயாரித்த படங்களையும் மிகக் குறைந்த நாட்களில் இப்படி டிஜிட்டலில் வெளியிட்டது குறிப்பிட வேண்டிய ஒன்று.