தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
முன்னணி சினிமா நடிகர்கள், நடிகைகள் வெளிப்புறப் படப்பிடிப்புகளில் பயன்படுத்தவதற்காக அவர்களுக்கு கேரவன் என அழைக்கப்படும் ஓய்வெடுக்கும் வண்டியை வழங்குவார்கள். ஒரு நாள் வாடகையாக சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதற்காக தயாரிப்பாளர் செலவு செய்வார்.
வெளிப்புறப் படப்பிடிப்புகளில் நடிகர்கள், நடிகைகள் தங்குவதற்கு தனியாக ஸ்டார் ஹோட்டல்களில் புக் செய்வார்கள். அது அல்லாமல் படப்பிடிப்பு லொகேஷன்களில் பயன்படுத்துவதற்குத்தான் கூடுதலாக இந்த கேரவன் வசதி.
இந்தியாவில் உள்ள நடிகர், நடிகைகளில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ஆலியா பட் ஆகியோர்தான் விலை உயர்ந்த சொந்த கேரவனைப் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களது வரிசையில் தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இடம் பிடித்துள்ளார். அவருடைய கேரவன் பற்றிய புகைப்படங்களை நேற்று அவர் வெளியிட்டார். அதற்கு 'பால்கன்' என அவர் பெயரிட்டிருக்கிறார்.
இந்த வண்டி 'பாரத் பென்ஸ்' சேசிஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றம் முழுவதுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் அல்லு அர்ஜுன் கையெழுத்தான 'எஎ' என்பது லோகோ போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் கேபின் முழுவதும் சுழலக் கூடிய வசதி கொண்ட சுழல் நாற்காலியைக் கொண்டுள்ளது. அது அவருடைய மேக்கப் சேர் ஆகவும் பயன்படும். மின்சாதனம் மூலம் அந்த நாற்காலியின் அசைவுகளைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு எதிரில் மிகப் பெரிய கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
விருந்தினர்கள் வந்தால் அவர்கள் அமர்வதற்கு சோபா ஒன்றும் இடம் பெற்றுள்ளது. தரையும், மேல்தளமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பல வண்ண விளக்குகள் அதில் இடம் பெற்றுள்ளன. மேல்தள விளக்குகளின் வண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
அறை போன்ற ஒரு வடிவமைப்பில் டிவி, பெட் உள்ளது. அது ஓய்வெடுக்கும் அறையாக இருக்கும். அதில் அட்டாச் பாத்ரூம் வசதி உண்டு. மொத்தம் 7 கோடி ரூபாய் செலவில் இந்த கேரவன் உருவாக்கப்பட்டுள்ளது.