வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' |
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் நின்னு கோரி. நானி, நிவேதா தாமஸ், ஆதி பினிசெட்டி, முரளி சர்மா, தணிகலபரணி, பிருத்விராஜ், வித்யூலேகா ராமன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். அறிமுக இயக்குனர் சிவா நிர்வனா இயக்கி இருந்தார். டி.வி.வி தனன்யா தயாரித்திருந்தார். திருமணமாகி ஒரு ஆண்டுகள் கணவனுடன் வாழ்ந்த மனைவி, தன் கணவனுக்குத் தெரியாமல் தனது முன்னாள் காதலனை சந்திக்க வெளிநாட்டுக்குச் செல்கிறார். ஏன் செல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை.
இந்த படத்தைத்தான் தற்போது இயக்குனர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்ய இயக்குகிறார். இதில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. இயக்குனர் கண்ணன் ஏற்கெனவே ஜப் வீ மெட் (கண்டேன் காதலை), டெல்லி பெல்லி (சேட்டை) ஆகிய இந்தி படங்களை ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.