ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு. இந்தப்படத்தின் மூலம்தான் சுசீந்திரன், விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி நால்வரும் அறிமுகமாகி புகழ் பெற்றார்கள். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதன் கதையை சுசீந்திரனே எழுதியுள்ளார். அவரது உதவியாளர் செல்வசேகரன் இயக்கி உள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த சூரி, கிஷோர், அப்புக்குட்டி, இதிலும் நடித்துள்ளனர். விஷ்ணுவுக்கு பதில் விக்ராந்த்தும், சரண்யா மோகனுக்கு பதில் அர்த்தனா பினுவும் நடித்துள்ளனர். செல்வகணேஷ் இசை அமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அற்புதம் சினிமா சார்பில் பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிக்சர் பாக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
படம் பற்றி இயக்குனர் செல்வசேகரன் கூறியதாவது: கதை களம், கபடி மட்டும்தான். முந்தைய பாகத்தோடு தொடர்புடையது மற்றபடி இது முற்றிலும் வேறு கதை. கிராமத்து இளைஞர்களின் ரத்தமும், சதையுமாக இருக்கும் கபடி விளையாட்டை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கி இருக்கிறோம்.
1987ம் ஆண்டில் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறோம். மேலும் முதல் பாகத்தில் நடித்த சூரி, அப்புகுட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது .
கிளைமாக்சுக்காக நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொளி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து நடத்தி தத்ருபமாக படமாக்கியுள்ளோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக படம் அமையும். அனைத்து பணிகளையும் முடித்து விட்டு ஆட்டத்துக்கு ரெடியாக இருக்கிறோம் என்றார்.