Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதலமைச்சராக நடிப்பாரா விஜய்?

02 ஜூலை, 2019 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Will-Vijay-act-in-CM-Role.?

அட்லீ இயக்கும் பிகில் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் நயன்தாரா, இந்துஜா, கதிர், யோகிபாபு, விவேக் உள்பட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் மும்பை செல்கிறார் விஜய்.

இந்நிலையில், அடுத்தபடியாக மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் விஜய், அதையடுத்து ஷங்கர் இயக்கும் முதல்வன் 2 படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கமலை வைத்து ஷங்கர் இயக்கயிருந்த இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்ட விட்டதாக கூறப்படும் நிலையில், அர்ஜூனை வைத்து தான் இயக்கிய முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்தபடியாக விஜய்யை வைத்து ஷங்கர் இயக்குவதாகவும், விஜய் முதலமைச்சராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அவர் முதல்வராக நடிப்பாரா? என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளது.

காரணம், சர்கார் படத்தின் கிளைமாக்சில் விஜய் முதல்வர் ஆவது போன்று தான் முதலில் கதை பண்ணியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் விஜய்க்கு தான் முதல்வராக நடிப்பதில் உடன்பாடு இல்லாததால் தான் அவர் வேறு நபரை முதல்வராக்குவது போன்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது.

இப்படியான நிலையில், ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்துள்ள இந்த நேரத்தில் தான் முதல்வராக நடிப்பதற்கு விஜய் ஒத்துக்கொள்வாரா? என்கிற கேள்விகளும் தற்போது எழுந்திருக்கிறது. அதனால் முதல்வன்-2 படத்தில் விஜய் முதல்வராக நடிப்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
ஜோதிகா பாடலை பாடிய சாயிஷாஜோதிகா பாடலை பாடிய சாயிஷா மீண்டும் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
04 ஜூலை, 2019 - 19:46 Report Abuse
Vasudevan Srinivasan முதலமைச்சராக 'நடிக்கலாம்' தப்பில்லை..
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03 ஜூலை, 2019 - 15:14 Report Abuse
Natarajan Ramanathan 63 படம் ஆச்சு.....இவன் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் பில்டப்பு
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
03 ஜூலை, 2019 - 10:37 Report Abuse
ராஜவேலு ஏழுமலை அவரு அப்படி நடிக்கிறாரு நடிக்கல அத விடுங்க. வருங்காலத்தில் தமிழக முதலமைச்சரா அவரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03 ஜூலை, 2019 - 09:37 Report Abuse
Natarajan Ramanathan முதலில் இவனை "நடிக்க" சொல்லுங்கள். பிறகு யாராக வேண்டுமானாலும் நடிக்கட்டும். தமாஷ் பண்ணாதிங்க.
Rate this:
amicos - Bali,இந்தோனேசியா
03 ஜூலை, 2019 - 01:52 Report Abuse
amicos காசு குடுத்தா எப்படி வேணாலும் நடிப்பார் முதல்வர் தான் ஆஹா முடியலே முடியாது சினிமாளையாவது
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in