Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு என்ன நடக்குதுன்னே புரியவில்லை: சந்தீப் கிஷன் புலம்பல்

02 ஜூலை, 2019 - 11:56 IST
எழுத்தின் அளவு:
I-dont-what-happend-for-me-says-Sundeep-kishan

சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன் நடித்துள்ள படம் கண்ணாடி. தமிழ், தெலுங்கில் தயராகி உள்ள இந்தப் படம். வருகிற 12ந் தேதி வெளிவருகிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு வந்திருந்த சந்தீப் கிஷன் நிருபர்களிடம் கூறியதாவது:

தெலுங்கில் கடந்த 2 வருடங்களாக நான் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறேன். தமிழில் நான் நடித்த மாநகரம் படம் தெலுங்கில் ஓரளவுக்கு எனக்கு பெயர் பெற்று கொடுத்தது. ஆனால் அதன் பிறகு நடித்த மாயவன் படத்தின் தெலுங்கு உரிமத்தை வாங்கிய விநியோகஸ்தர் சென்சார் காப்பியை திரையிட்டு அந்தப் படத்தை தோல்வி அடைய வைத்தார். அது மட்டுமில்லாமல் "நாயை வைத்து வேண்டுமானாலும் படம் எடுங்கள், சந்தீப்பை வைத்து எடுக்காதீர்கள்" என்று பேசினார். அது ஆந்திராவில் வைரலாக பரவி எனக்கு எதிராக அமைந்தது.

தமிழில் மாயவன் படம் பெரும் போராட்டத்துக்கு பிறகு வெளிவந்தது. நரகாசுரன் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் இதுவரை வெளிவரவில்லை. அதற்கு பல பிரச்சினைகள் இருக்கிறது. அந்த இயக்குனரும் மிகவும் சிரமப்படுகிறார். தெலுங்கில் நான் நடித்த ஒரு படம் பல வருடங்களாக வெளிவராமல் இருக்கிறது. எனக்கு என்ன ஆச்சு? என்னை சுற்றி என்ற நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தது.

அந்த நேரத்தில்தான் கண்ணாடி படம் வந்தது. இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறுகிற ஸ்கிரிப்ட் என்பதை கண்டுபிடித்து முழு ஆர்வத்துடன் நடித்தேன். இதன் தெலுங்கு உரிமத்தையும் நானே வாங்கி விட்டேன். இந்தபடம் எனக்கான இடத்தை பெற்றுத் தரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாண்டியராஜன் மகனுக்கு கை கொடுக்குமா கா.மு.க?பாண்டியராஜன் மகனுக்கு கை கொடுக்குமா ... ரொமான்ட்டிக் டிராமாவாக அதர்வா - அனுபமா படம் ரொமான்ட்டிக் டிராமாவாக அதர்வா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in