Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாண்டியராஜன் மகனுக்கு கை கொடுக்குமா கா.மு.க?

02 ஜூலை, 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Did-Kadhal-munnetra-kazhagam-will-give-success-to-Prithvi-pandiyarajan

இயக்குனர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன். 13 வருடத்திற்கு முன்பே கைவந்த கலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டார். அதன் பிறகு நாளைய பொழுது உன்னோடு, வைதேகி, வாய்மை, தொட்ரா, சகா உள்பட சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் ஒரு ஹீரோவாக ஜெயிக்க முடியவில்லை. இதனால் பாண்டியராஜன் அவரை எப்படியாவது ஜெயிக்க வைக்க ஆண்பாவம் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் அதுவும் நிறைவு பெறவில்லை.

இந்த நிலையில் வருகிற 5ந் தேதி வெளிவருகிறது, பிருத்விராஜன் நடித்த காதல் முன்னேற்ற கழகம். இதில் அவர் 80களின் இளைஞராக அந்த காலகட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர், ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பி.சி.சிவன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் மாணிக்க சத்யா கூறியதாவது:

இந்தப்படம், 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருக்கிறார். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார். துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான். அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம் என்றார். காதல் முன்னேற்ற கழகம், பிருத்விராஜனுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அவதார் வசூலை முறியடிக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்அவதார் வசூலை முறியடிக்காத ... எனக்கு என்ன நடக்குதுன்னே புரியவில்லை: சந்தீப் கிஷன் புலம்பல் எனக்கு என்ன நடக்குதுன்னே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in