'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு | டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168' | மீண்டும் ஜெமினியாக துல்கர் | உதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ் |
தெலுங்கில் தற்போது இளம் முன்னணி நாயகனாக வளர்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இந்த இடத்திற்கு வருவதற்கு அவருக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தான். அது மட்டுமல்ல இந்த படம் தற்போது தமிழில் விக்ரம் மகன் துருவ் நடிக்க ஆதித்ய வர்மா என்கிற பெயரில் தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் இதே படம் கபீர் சிங் என்கிற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படம் வெளியான பின்னர் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாகித் கபூர் இருவரிந நடிப்பையும் ஒப்பிட்டு ரசிகர்களின் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகின்றன. இந்தநிலையில் இந்த படத்தின் ஒரிஜினல் ஹீரோவான விஜய் தேவாரகொண்டா கபீர் சிங் படத்தை இதுவரை பார்க்கவில்லை.
இதுபற்றி கூறியுள்ள அவர், தற்போது தனது படத்தின் படப்பிடிப்பிற்காக பிரான்ஸிற்கு வந்துள்ளதாகவும் ஹைதராபாத் திரும்பியதுமே கபீர் சிங் படத்தை பார்க்க ரொம்பவே ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக அர்ஜுன் ரெட்டியிலிருந்து இந்த படத்திற்காக என்னென்ன மாற்றங்கள் இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி செய்திருக்கிறார் என்பதை பார்க்க தான் ரொம்பவே ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.