மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? | மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் |
பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு துரோகி, கோலிசோடா, வஜ்ரம், படங்களில் சிறுவனாகவே நடித்தார். பின்பு சில படங்களில் விடலை பையானக நடித்த கிஷோர், தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இன்று(ஜூன் 28) வெளியாகி உள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் மூலம் முழுமையான நடிகரான தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:
ஹவுஸ் ஓனர் பயணம் எனக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தபோது நான் ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பில் இருந்ததை போலவே நிறைய கற்றுக்கொண்டேன். லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு அசாதாரண இயக்குனர். திரையில் வரும் ஒவ்வொரு பிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என் கேரியரில் எனக்கு இது முக்கியமான படம். என்றார்