Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதி தயாரிப்பில் ஹீரோயின் இல்லாத படம்

28 ஜூன், 2019 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-movie-without-heroine

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ், ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் படம் சென்னை பழனி மார்ஸ். இதனை ஆரஞ்சுமிட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் பிஜூ ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார், தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி பிஜு கூறியதாவது:

நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது. இவர்களின் கனவும், பயணமும் மற்றவர்களால் எப்படி பார்க்கப்படும்? என்னென்ன சுவாரஸ்யங்கள் நடக்கும்? அதில் உள்ள காமெடி தான் படமே. அவர்கள் மார்ஸ் போனார்களா என்பது கிளைமாக்ஸ்.

மார்ஸை நோக்கிய பயணம் என்பதால் இது சயின்ஸ் பிக்சன் படமோ அல்லது கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலச்சக்கர பயணம் குறித்த படமோ அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் இல்லையா.? சிலரிடம் அதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள். ஆனால் நமது கனவை நோக்கி விடாமுயற்சியுடன் முயற்சித்தால் அதை அடையலாம் என்பதை தான் இந்த படத்தின் மூலம் சொல்ல முயற்சித்து இருக்கிறோம்.

20 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ் மூலமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இன்னொரு நபருக்கு செய்தி அனுப்ப முடியும் என சொல்லி இருந்தால் நீங்கள் நம்பி இருப்பீர்களா..? ஆனால் அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. கனவு ஜெயிக்க வேண்டுமென்றால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்படுங்கள் என்பதையே இப்படம் உங்களுக்கு செய்தியாகச் சொல்லும் படம். இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. ஒரு பாடகர் இருப்பதால் ட்ராவல் படம் என்பதால் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. சில பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக இருக்கும். என்கிறார் இயக்குநர் பிஜூ.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒட்டகத்தை நம்பி நிற்கிறேன்: விக்ராந்த் நெகிழ்ச்சிஒட்டகத்தை நம்பி நிற்கிறேன்: ... லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: பசங்க கிஷோர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நிறைய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in