ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? |
கடந்த, 1983ல், இந்திய கிரிக்கெட் அணிக்கு, உலக கோப்பையை வென்று கொடுத்த, கபில்தேவின் வாழ்க்கை வரலாறு, ஹிந்தியில், திரைப்படமாக தயாராகிறது.இந்த படத்துக்கு, 83 என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், கபில்தேவாக, நடிப்பவர், ரன்வீர் சிங். கபில் தேவின் மனைவி, ரோமியாக நடிப்பவர் யார் தெரியுமா; சாட்சாத், ரன்வீர் சிங்கின் மனைவியான, தீபிகா படுகோனே தான்.
இது குறித்து தீபிகா கூறுகையில், ''திருமணத்துக்கு முன் வெளியான சில படங்களில், நாங்கள் இருவரும், காதலர்களாக நடித்துள்ளோம். ஆனால், திருமணத்துக்கு பின், முதல் முறையாக, கணவன் - மனைவியாகவே இப்போது நடிப்பது, மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது, கூடுதல் சந்தோஷமாக உள்ளது,'' என்கிறார்.
இந்த படத்தில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தாக, நம்ம ஊர், ஜீவா நடிக்கிறார் என்பது, கூடுதல் செய்தி.