Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கங்கனா சகோதரிகள் நேரில் ஆஜராக நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

27 ஜூன், 2019 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Court-summoned-to-Kangana-Ranaut-And-Sister-Rangoli

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், பெரும்பாலும் தினசரி ஏதோ ஒரு விதமாக செய்திகளில் அடிபட்டு கொண்டே இருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை சர்ச்சையான செய்திகளாகவே இருக்கின்றன. கங்கனா மட்டுமில்லாமல் அவர் சார்பாக அவரது சகோதரி ரங்கோலியும் பலர் மீது சர்ச்சையான கருத்துக்களை அவ்வப்போது கூறி வருகிறார்.

இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்ய பாஞ்சோலிக்கும் தனக்கும் இருந்த உறவு பற்றி கங்கனா சில இடங்களில் பேசி சர்ச்சையை கிளப்பினார்.

இதே போல அவரது சகோதரி ரங்கீலாவும் பல இடங்களில் பேசி வந்தார். இதையடுத்து ஆதித்யா பஞ்சோலி தனது மனைவியுடன் மும்பையில் உள்ள வெர்சோவா காவல் நிலையத்திற்கு வந்து கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும் கங்கனாவின் வழக்கறிஞர் தன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கங்கனா மற்றும் ரங்கோலி இருவருக்கும் 4 சம்மன்களை அனுப்பியுள்ள நீதிமன்றம், வரும் ஜூலை 26ம் தேதி இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அவர்களிடம் கண்டிப்பு காட்டி உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திஷா - டைகர் ஜோடி : கசந்த காதல்திஷா - டைகர் ஜோடி : கசந்த காதல் நிருபரை தாக்கி செல்போன் பறித்த சல்மான்கான் மீது வழக்கு நிருபரை தாக்கி செல்போன் பறித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
29 ஜூன், 2019 - 12:05 Report Abuse
எதிர்க்குரல் ஜட்ஜ் அய்யா நேரில் பார்த்து ஜொள்ளு விடத்தான் இந்த நான்கு சம்மன் ...இதுவே சாமானியனாக இருந்தால் இந்த தர்மப்பிரபுக்கள் என்ன அடாவடித்தனம் பண்ணுவார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in