Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மதுவால் அரசுக்கு அவமானம் : கஸ்தூரி விளாசல்

27 ஜூன், 2019 - 12:10 IST
எழுத்தின் அளவு:
TASMAC-:-Kasthuri-slams-Govt.,

சமூகப் பிரச்னைகளில் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை பயமில்லாமல் எடுத்து வைப்பவர் நடிகை கஸ்தூரி. கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வரும்போது, குடித்து விட்டு வாகனத்தில் வந்தவர்கள் விபத்தை ஏற்படுத்த, கண் முன்னாலேயே மனைவியை பறிகொடுத்தார். குழந்தை சிகிச்சையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கொடூரத்தைப் படித்து விட்டு, நடிகை கஸ்தூரி, தன்னுடைய முகநூல் பக்கத்தில் பொங்கியபடியே, அரசையும், தமிழக அரசியலையும் வறுத்தெடுத்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவரு கூறியிருப்பதாவது:

ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையை மது சின்னாபின்னப்படுத்திவிட்டது. சமூக ஆர்வலர், மக்கள் சேவகர், எல்லாவிதத்திலும் நல்லவர். கோவை மருத்துவர் டாக்டர் ரமேஷ் எந்த வகையிலும் சறுக்காதவர் வாழ்க்கையில் சரக்கு விளையாடிவிட்டது.

என்ன செய்தார் அவர்? குடித்து தன்னை தானே அழித்துக் கொண்டாரா என்றால் இல்லை. டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு இரு பொறம்போக்குகள் மோட்டார் பைக்கை அந்த நல்லவரின் மனைவி மகள் மீது ஏற்றிவிட்டனர். மனைவி, அங்கேயே உயிரிழந்தார். மகள் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்க, தகப்பனோ அந்த இடத்திலேயே மதுவுக்கு எதிராக போராட செய்தியை படித்த நமக்கு பதறுகிறது. தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் டாக்டர் ரமேஷின் நிலை, அவர் தலையெழுத்து என்றோ, ஒரு தற்குறியின் தவறு என்றோ கடந்து போய் விட முடியாது. இது தமிழகத்தின் தலைகுனிவு. திராவிட அரசுக்களின் தனிப்பெருமை.

இன்னும் எத்தனை டாக்டர் ரமேஷ் இறந்த மனைவியின் சவத்துடன் தெருவில் உட்கார வேண்டும்? இன்னும் எத்தனை சசி பெருமாள்கள் உயிர் தியாகம் செய்ய வேண்டும்? எவ்வளவு ரத்தம் குடித்தால் தெளியும் தமிழனின் சிந்தை?

"குடிப்பது தனிமனித உரிமை, தனிப்பட்ட விருப்பம், நீ யார் தலையிட?... "
என்னது, உரிமையா ? தனிமனித சுதந்திரமா?

ஒரு தனிமனிதன் குடித்தால் அவனுக்கு மட்டுமா தீங்கு? நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வளவு கேடு! மது - சமூக சீர்கேட்டின் முதன்மை தூண். மதுவுக்கு அடிமையானவர், தங்கள் உடலை மட்டும் அழித்துக் கொள்ளவில்லை, தங்களை நம்பிய குடும்பத்தினரை , குழந்தைகள் எதிர்காலத்தை, அவரை பொறுத்துக் கொள்ளும் சமூகத்தை, அவரை தாங்கும் தேசத்தையே நாசம் செய்கிறார்.

தமிழக கஜானா மதுவை நம்பித்தானே இருக்கிறது?
ஓஹோ ! குடிமகன்களால் அரசுக்கு வருமானமா?

ஒரு குடிகாரனால்- குடிக்கும் செலவு, வேலையில் சொதப்பி முதலாளிக்கும்; நுகர்வோருக்கும் பொருளாதார இழப்பு, அவன் குடல் வெந்து விழும்போது, இலவச சிகிச்சை, அவன் அம்போவென்று விடும் மனைவிக்கு அவசர சிகிச்சை, பசியில் வாடும் பிள்ளைகளுக்கு சத்துணவு, படிப்பு, ஒரு நாள் அவன் மண்டையை போட்டால், அனாதை குழந்தைகளின் எதிர்கால பேரிழப்பு... இதற்கெல்லாம் என்ன விலை?

திருட்டும்; தீமைகளும்; குற்றங்களும் அதிகரிக்க அதிகரிக்க, அப்பாவி மக்களுக்கும் வரிக்கட்டும் நல்லவர்களுக்கும் காபந்து, கட்டடம், இன்சூரன்ஸ், செக்யூரிட்டி, போலீஸ் , நீதிமன்ற செலவு....இதற்கான விலையெல்லாம் கணக்கு பார்த்தால் ? இப்போதே, பல வீடுகளில் பெற்ற குழந்தைகளுக்கு உணவில்லை, படிப்பில்லை, குழந்தைப் பருவம் இல்லை. இன்னும் போகப் போக ஊரில் மற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, உயிருக்கும் உடைமைக்கும் உத்திரவாதம் இதெல்லாம் சுத்தமாக அழியும் அபாயம் நெருங்குகிறது.

கணக்கு போட்டு பார்த்தால்... மதுவால் அரசுக்கு வருமானமா, அவமானமா?
ஆனாலும் திராவிட அரசுக்கள் மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை கெட்டியாக பிடித்துக்கொள்வது ஏன் ?
ஏனென்றால்....

மதுவால் அரசுக்கு வருமானம் என்பதை விட, அரசியல்வாதிகளுக்கு அளவிலாத லாபம் என்பதே உண்மை. தமிழ்நாட்டின் போதை சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அரசியல் புள்ளிகள், அதிகாரிகள், குறிப்பாக திராவிட இயக்கத்தினர், நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிஜம். அரசியலில் எதிரும் புதிருமாக உதார் காட்டுபவர்கள் இங்கு வியாபாரத்திலும் கையூட்டிலும் பங்காளிகள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

அதைவிட முக்கியம், திராவிட அரசியலின் மிக பெரிய ராஜதந்திரம் மதுதான். அதைவைத்துதான் மக்களை வறுமையில் அறியாமையில் உழலும் சிந்திக்கவே இயலாத ஆட்டுமந்தை கூட்டமாக அடிமைப்படுத்தி வைத்து உள்ளார்கள். குவார்ட்டர் குடுத்தால் போதும் , ஓட்டையும் வீட்டையும் நாட்டையும் விற்று விடுவான் தமிழன் என்ற நிலையில் வைத்துள்ளார்கள்.

அந்த இறுக்கமான பிடியை தளர்த்த என்றுமே விரும்ப மாட்டார்கள். அதனால்தான், நம் திராவிட தலைவர்கள் மத்திய அரசை எதிர்ப்பார்கள்- நம் மத்தியில் உள்ள மது அரக்கனை எதிர்க்கவேமாட்டார்கள். பலகை மொழியை அழிப்பார்கள், படுகுழியை ஒழிக்க மாட்டார்கள்.

குடிச்சு குடிச்சு குடல் வெந்து சாகட்டும்...
பெற்ற குழந்தைகளை பட்டினி போடட்டும், குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கட்டும், கட்டின பொண்டாட்டியை அடிக்கட்டும் கொல்லட்டும், இப்பொழுது அடுத்தவன் குடும்பத்தையும் இடிக்கட்டும் கொல்லட்டும்... இந்த நாடும்; மக்களும் நாசமாய் போகட்டும்.... அவங்க பாக்கெட்டு நிறைஞ்சால் சரி என்றே, நமது அழிவை ரசிப்பார்கள். தலைமையை நம்பி தமிழன் தடுமாறியது போதும். தெளிந்திடு தமிழா தெளிந்திடு!

இவ்வாறு அந்தப் பதிவில் கஸ்தூரி பொங்கித் தீர்த்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்த்திபன், ஜெயராம்'பொன்னியின் செல்வன்' படத்தில் ... சிந்துபாத்திற்கு யுவனும் உதவி சிந்துபாத்திற்கு யுவனும் உதவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Arun Pradeep - Chennai,இந்தியா
02 ஜூலை, 2019 - 16:07 Report Abuse
Arun Pradeep அப்படியே எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குடியை நான் கடுமையாய் எதிர்ப்பதும் இந்த காரணத்திற்காகத்தான். இந்த குடிகாரனுங்க குடிச்சி நாசமா போகட்டும் அது அவுங்க கொழுப்பு. ஆனா அதுக்காக நல்லவங்க பாதிப்படைவதை , குடும்பத்தையே இழப்பதை கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை. தைரியமான, உண்மையான பதிவு கஸ்துரி அவர்களே. நன்றி.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
02 ஜூலை, 2019 - 03:46 Report Abuse
meenakshisundaram இந்த கலாச்சாரத்தை ஆரம்பிச்சு வச்சவனுக்குத்தான் ஒரு கூட்டம் ராத்திரிலே கூடி மெரினாவில் இடம் வேணும்னு போராடிப்பினாங்க ஜெயிக்க வாதாடிய வக்கீலுக்கு பாராளு மன்ற ஸீட் வேறே
Rate this:
Raj - coimbatore,இந்தியா
30 ஜூன், 2019 - 02:18 Report Abuse
Raj கஸ்தூரி அப்படியே நீங்க நடிச்ச படங்களையெல்லாம் இன்னொரு தடவ பாருங்க... டைரக்டர் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று அரை குறை துணிகளில் நீங்கள் ஆடிய ஆட்டம் உங்களுக்கே தெரியும். மது கொடியது..அதை போலவே அரை குறை ஆடை அணிந்து ஆடுவதும் நல்லதல்ல என்று திரை துறையினருக்கு எடுத்துரையுங்கள். அதேபோல பெண்களை காட்சி பொருளாக்கி பணம் சம்பாதிப்பதும் கேவலம் என்று கூறுங்கள்.
Rate this:
krishna - Madurai,இந்தியா
28 ஜூன், 2019 - 19:54 Report Abuse
krishna இன்று பல இளம் பெண்கள் வேலை செய்யும் சிறுசேரி SIPCOT I.T PARK நிர்வாக அலுவலகம் பின்புறம் மாமூர்த்தி அம்மன் கோவில் வாசலில் SIPCOT சொந்தமான காலி மனைகளில் மற்றும் சிறுசேரி டோமினோ SBI பின்புறம் பிங்க் பெண்கள் விடுதி பின்னால் கேமரா அருகே SIPCOT காலி மனை கேட் அருகே மாமூர்த்தி அம்மன் கோவில் தெருவில் ஏகப்பட்ட ரவுடி குடிகாரர்கள் தினமும் கூடி சில காவல் துறை அரசியல் வியாதிகள் ஆசியுடன் குடித்து காலி பாட்டில் எங்கும் வீசி செல்வதாய் நண்பர்கள் கூறுகின்றனர். காவல் துறைக்கு அரசுக்கு SIPCOT தலைமைக்கு புகார் அளித்தும் பயனில்லை என்கின்றனர்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
28 ஜூன், 2019 - 17:59 Report Abuse
Vasudevan Srinivasan மற்ற விஷயங்கள் இப்படியே இந்த விஷயத்தில் கஸ்தூரி மேடம் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.. மது விற்பனையை அரசு வருமானத்துக்கு நம்புவது உண்மையிலேயே வருந்தத்தக்க விஷயம்.. வேலை கிடைக்கவில்லை அதானால் திருடினேன் என்று ஒரு திருடன் செய்வது இப்படி நொண்டி சாக்கு என்போமோ அதுபோலத்தான் கள்ள சாராயத்தை ஒழிக்க அரசு மது விற்பனையை அனுமதிக்கிறது என்பதும் ஒரு நொண்டி சாக்கு இங்கு அரசு என்று சொல்லியிருப்பது கட்சி சார்பற்ற விஷயம் அதாவது தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் இரு முக்கிய கட்சிகளும்தான் மதுவிலக்கை பொருட்படுத்துவதே இல்லை..
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in