விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
ரவிக்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்க, 2015ல் வெளிவந்த படம் 'இன்று நேற்று நாளை'. டைம் மிஷின் பற்றிய படமாக அமைந்து நல்லதொரு வெற்றியைப் பெற்ற படம். அப்படம் வெளிவந்து நேற்றுடன் நான்கு ஆண்டு நிறைவடைந்துள்ளது. அதையொட்டி நேற்று படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
முதல் பாகத்தை இயக்கிய ரவிகுமார் எழுத, அவருடைய இணை இயக்குனர் கார்த்திக் இப்படத்தை இயக்க உள்ளார். தற்போதைக்கு கருணாகரன் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் நாயகன், நாயகி யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்கள்.
ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 14வது படத்தை இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமான இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், சிவகார்த்திகேயன் அவருடைய 15வது படமான 'ஹீரோ' படத்திலும் 16வது படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 17வது படத்திலும் நடிக்க உள்ளார்.
சிவகார்த்கேயன் படத்தின் படப்பிடிப்பு சிக்கலால் தான் ரவிக்குமார் 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை என்கிறார்கள்.