Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிந்துபாத் - சிறப்புக் காட்சிகள் ரத்து

27 ஜூன், 2019 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Sindhubaadh-special-show-cancel

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ள சிந்துபாத் படம் இன்று(ஜூன் 27) வெளியாகிறது. இப்படத்திற்கு சென்னை சுற்றுப்புறங்களில் உள்ள சில தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளாக காலை 8 மணிக்கு சில காட்சிகளை திரையிட திட்டமிட்டு முன்பதிவும் செய்தார்கள். ஆனால், அந்த சிறப்புக் காட்சிகளை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டனர். தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் காட்சிகள் ரத்தானதும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வினியோகஸ்தர்கள் தரப்பில் சிறப்புக் காட்சிகளை திரையிட வேண்டாம். காலை 10 மணிக்கு மேல்தான் காட்சிகளைத் திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். ஆனால், அதுபற்றி கவலைப்படாத சில தியேட்டர்காரர்கள் 8 மணி காட்சிக்கு முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே, இன்று படம் வெளிவராது என சிலர் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். காலை காட்சிகள் திட்டமிட்டபடி 10 மணிக்கு மேல் திரையீடு நடந்தால்தான் படம் வெளிவருகிறது என்று நம்பமுடியும். ஏற்கெனவே, கடந்த வாரம் வெளிவருவதாக இருந்து ஒரு வாரம் தள்ளி இன்று படத்தை வெளியிடுகிறார்கள். இன்றும் நிலையற்ற தன்மை இருப்பது ஆச்சரியமாக உள்ளது. விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கூட இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இனி, தாங்கள் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்வதில் நடிகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றே ரசிகர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். பல நிதிப் பிரச்சினையில் சிக்கியுள்ள தயாரிப்பாளர்களுக்கு படங்களை நடித்துக் கொடுத்தால் இப்படித்தான் ஆக வேண்டும் என்று கோலிவுட்டிலேயே கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆடை டீசரால் நீக்கப்பட்டாரா அமலா பால்ஆடை டீசரால் நீக்கப்பட்டாரா அமலா பால் இன்று நேற்று நாளை, இரண்டாம் பாகம் அறிவிப்பு இன்று நேற்று நாளை, இரண்டாம் பாகம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in