இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன், தமிழில் காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா படங்களில் நடித்துள்ளார். தற்போது, கொம்பு வச்ச சிங்கமடா, வானம் கொட்டட்டும் படங்களில் நடித்து வருகிறார். இதில், வானம் கொட்டட்டும் படத்தை மணிரத்னம் தயாரிக்கிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை படைவீரன் படத்தை இயக்கிய தனா இயக்குகிறார்.
இந்நிலையில், மணிரத்னத்தின் ரசிகையான மடோனா, சில தினங்களுக்கு முன்பு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அப்போது அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் மடோனா, மணிரத்னத்தை சந்தித்ததால் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை இந்த போட்டோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னத்தை மடோனா சந்தித்ததும், அவர் பொன்னியின் செல்வனில் நடிக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல, வானம் கொட்டட்டும் பட விஷயமாக மரியாதை நிமித்தமாகவே சந்தித்து இருக்கிறார்.