Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெப்சிரீஸில் ஹீரோ ஆனார் முனீஸ்காந்த்

26 ஜூன், 2019 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Munishkanth-turn-as-hero-in-Postman

திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராம்தாஸ். நாடகங்களில் காமெடியனாக நடித்தவர். அதன்பிறகு சினிமாவுக்குள் வந்தார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவருக்கு முண்டாசுபட்டி படம் ஒரு அடையாளத்தை கொடுத்தது. அந்தப் படத்தில் அவர் முனீஸ்காந்த் என்ற கேரக்டரில் நடித்தார். அதுவே அவரது சினிமா பெயராகவும் ஆனது. அதன் பிறகு 50 படங்களுக்கு மேல் நடித்து இப்போது முன்னணி காமெடி நடிகனாக நடிக்கிறார். அவ்வப்போது குணசித்தர வேடங்களிலும் நடிப்பார்.

தற்போது ஜீ5 நிறுவனம் தயாரித்துள்ள போஸ்ட்மேன் என்ற வெப் சீரிசில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஒரு போஸ்ட் மேனிடம் 9 முக்கிய தபால்கள் இருக்கிறது. ஒரு விபத்தில் சிக்கும் அவர் 23 வருடங்கள் கோமாவில் இருக்கிறார். பின்பு அதிலிருந்து மீண்ட பிறகு தான் கொடுக்காத அந்த 9 தபால்களை தனது மகளுடன் இணைந்து கொடுக்க முயற்சிக்கிறார். உரிய நேரத்தில் அந்த தபால்கள் போய் சேராததால் சம்பந்தப்பட்ட குடும்பங்களில் என்னென்ன மாற்றங்கள் நடத்திருக்கிறது என்பதுதான் கதை.

இதில் அந்த போஸ்ட்மேனாக முனீஸ்காந்த் நடித்துள்ளார். அவரது மகளாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். பிரசாந்த் குணசேகரன் இயக்கி உள்ளார். நாளை முதல் இந்தப் படம் இணையதளத்தில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீனாவில் ரோபோவை மிரட்டும் லயன் கிங்சீனாவில் ரோபோவை மிரட்டும் லயன் கிங் சிங்கத்துக்கு குரல் கொடுத்த சித்தார்த் சிங்கத்துக்கு குரல் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in