Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீட்டருகே நின்ற மர்ம டிரக் : நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு குஷ்பு நன்றி

25 ஜூன், 2019 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Actress-Kushboo-thanks-to-Police

டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகாருக்கு, உடனடி நடவடிக்கை எடுத்த காவல் துறையினரை, நடிகை குஷ்பு பாராட்டினார்.நடிகை குஷ்பு, பட்டினப்பாக்கம், லீட் காஸ்டல் வடக்கு தெருவில் வசித்து வருகிறார். அவரது வீடு அமைந்து உள்ள தெருவில், சில நாட்களாக, கேட்பாரற்ற நிலையில், சரக்கு வேன் ஒன்று, நம்பர் பிளேட் இன்றி நின்று கொண்டு இருந்தது.

அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில், குறிப்பிட்டு இருந்தார். இதை அறிந்த பட்டினப்பாக்கம் போலீசார், அந்த சரக்கு வேனை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் நிறுத்தினர். அந்த வேன் குறித்து விசாரித்ததில், கால்நடை மருத்துவர் ஒருவர், புதிதாக வாங்கியதும், அவர் மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்த இருந்ததும் தெரிய வந்தது.

மருத்துவர் பெயரை வெளியிடாத போலீசார், புதிய வேன் என்பதால், நம்பர் பிளேட் இல்லாமல் நிறுத்தியதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வேனை விடுவித்தனர்.

டுவிட்டர் புகாருக்கு, உடனடி நடவடிக்கை எடுத்த போலீசாரை, குஷ்பு வெகுவாக பாராட்டினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கிய கத்தார் ரஜினி மக்கள் மன்றம்கடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கிய ... கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரங்க்தே கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரங்க்தே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

25 ஜூன், 2019 - 17:39 Report Abuse
Arul Krish marma truck....wow what a twist
Rate this:
ajith -  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூன், 2019 - 14:14 Report Abuse
ajith heavy vehicle he parked in road side whats wrong in that is that in the centre of the road not right then what....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in