ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
10 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள சுசீந்திரன், சுட்டுபிடிக்க உத்தரவு படத்தின் மூலம் நடிகராகி இருக்கிறார். என் மனசுக்கு பிடித்திருந்தால் 10 நிமிடம் வரக்கூடிய கேரக்டரிலும் நடிப்பேன் என்கிறார். மேலும் அவர் கூறியதாவது:
சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின், எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு, என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
எதுவொன்றைச் செய்தாலும் அதில் உச்சத்திற்கு சென்ற பின்பு தான் அடுத்த வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அப்படி பார்த்தால் இயக்குநராக நான் இன்னும் உச்சம் தொடவில்லை. அதன்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். இதற்கிடையில், இதுபோல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அது 10 நிமிட பாத்திரமாக இருந்தாலும் கூட.
இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் கூறினார்.