கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி கார்த்திகேயன் தயாரிக்கும் படம் கிளாப். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதில் ஆதி, தடகள வீரராக நடிக்கிறார். அகான்ஷா சிங் மற்றும் கிரிஷா குரூப் ஆகியோரும் தடகள வீராங்கணைகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரித்வி ஆதித்யா கூறியதாவது : இப்போது எங்கள் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறோம், தொடர்ந்து முழு வீச்சில் செல்லத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து கலைஞர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தங்களை தாங்களே தயார்படுத்தி கொள்வதால், என் வேலை எளிதாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆதி இயற்கையாகவே உடற்பயிற்சி ஆர்வலர். அகான்ஷா சிங் ஒரு சிறந்த கலைஞர். கிரிஷா குரூப் கடந்த சில மாதங்களாக தன்னுடைய தடகள விளையாட்டு வீராங்கணை பாத்திரத்திற்காக மிக கடினமான உழைத்து வருகிறார். என்றார்.