Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் 3 துவங்கியது : போட்டியாளர்கள் யார்? - முழு விபரம்!

23 ஜூன், 2019 - 22:49 IST
எழுத்தின் அளவு:

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து, மூன்றாவது சீசன் துவங்கி உள்ளது. முதல் இரண்டு பாகங்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் இரண்டு பாகங்களை போன்றே மொத்தம் 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த முறை 7 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 15 பேர் முதற்கட்டமாக களமிறங்கி உள்ளனர். வரும் வாரங்களில் இன்னும் அதிகமாகலாம்.

இன்று(ஜூன் 23) ஆரம்பமான இந்த நிகழ்ச்சி துவக்க விழா கோலாகலமாக துவங்கியது. ஒவ்வொரு போட்டியாளர்களையும் கமல் அறிமுகம் செய்து வைத்து அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.

சரி மூன்றாவது சீசனின் போட்டியாளர்கள் யார் யார் பார்ப்போம்...

01. பாத்திமா பாபு
போட்டியின் முதலாவதாக களமிறங்கியவர் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி, பின்னர் நடிகையாக உள்ளார். அதோடு, அதிமுக., கட்சியிலும் இருக்கிறார். இவர் இம்முறை பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.

02. லாஸ்லியா
பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் லாஸ்லியா. இவர் ஒரு பிரபலமான மாடல் ஆவார்.

03. சாக்ஷி அகர்வால்
மூன்றாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

04. மதுமிதா
போட்டியின் நான்காவதாக களமிறங்கி இருப்பவர் மதுமிதா. இவரை இப்படி கூறுவதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் காமெடி நடிகையாக களமிறங்கியவர், பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார்.

05. கவின்
ஐந்தாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகர் கவின். விஜய் டிவியில் ஔிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமானவர், சமீபத்தில் வெளிவந்த நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

06. அபிராமி
போட்டியில் 6வது நபராக களமிறங்கி இருப்பவர் அபிராமி. இவர் ஒரு நடனக்கலைஞர் ஆவார்.

07. சரவணன்
ஏழாவது நபராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி இருப்பவர் நடிகர் சரவணன். பல படங்களில் ஹீரோவாக நடித்து, தற்போது குணச்சித்ர நடிகராக வலம் வருகிறார். இவரை பருத்திவீரன் சித்தப்பு சரவணன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.

08. வனிதா விஜயகுமார்
போட்டியின் 8வது நபராக களமிறங்கி இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகள். சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஹீரோயின் ஆகி பிரபலமானதை விட, தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டை, சர்ச்சைகளில் சிக்கியவர்.

09. சேரன்
பிக்பாஸில் 9வது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகரும், இயக்குநருமான சேரன். இவர் இந்த போட்டியில் பங்கேற்று இருப்பதை பலரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.

10. ஷெரின்
போட்டியின் 10வது நபராக நடிகை ஷெரின் பங்கேற்றுள்ளார். துள்ளுவதோ இளமை, விசில், ஸ்டூடென்ட் நம்பர் 1 உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

11. மோகன் வைத்யா
11வது நபராக மோகன் வைத்யா களமிறங்கி உள்ளார். கர்நாடக சங்கீத பாடகராகவும், வயலினிஸ்ட்டாகவும், விக்ரம் நடித்த சேது உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

12. தர்ஷன்
போட்டியின் 12வது நபராக களமிறங்கி இருப்பவர் தர்ஷன். இவர் இலங்கையை சேர்ந்த ஒரு மாடல் ஆவார்.

13. சாண்டி
13வது போட்டியாளராக நடன மாஸ்டர் சாண்டி களமிறங்கி உள்ளார். சின்னத்திரையில் நடனத்தால் பிரபலமாகி, தற்போது சினிமாவிலும் நடன அமைப்பாளராக வலம் வருகிறார்.

14. முகன்ராவ்
போட்டியின் 14வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் முகன்ராவ். இவரும் ஒரு மாடல் தான், மலேசியாவை சேர்ந்தவர்.

15. ரேஷ்மா
15வது போட்டியாளராக ரேஷ்மா களமிறங்கி உள்ளார். மாடலிங் துறையில் இருந்து வந்த இவர் ஒரு சில படங்களி்ல் நடித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
குளறுபடி ஏதும் நடக்கவில்லை : பாண்டவர் அணிகுளறுபடி ஏதும் நடக்கவில்லை : ... கைபுள்ள, வண்டு முருகன் - தொடரும் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை கைபுள்ள, வண்டு முருகன் - தொடரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Shanan -  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூன், 2019 - 07:31 Report Abuse
Shanan please avoid the stupid program news, dont give importance to this program
Rate this:
LAX - Trichy,இந்தியா
25 ஜூன், 2019 - 03:07 Report Abuse
LAX ரேஷ்மா:: ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.. என்றால் அவை என்ன படங்கள் என்று உங்களுக்கே தெரியாதா..? ஹா.. ஹா.. நல்ல வேடிக்கை..
Rate this:
24 ஜூன், 2019 - 19:54 Report Abuse
இந்தியன் குடி குடியை கெடுக்கும் பிக்பாஸ் குடும்பத்தை கெடுக்கும்...
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
24 ஜூன், 2019 - 11:44 Report Abuse
siriyaar எத்தனை குடி கெடுமோ
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
24 ஜூன், 2019 - 10:52 Report Abuse
Mirthika Sathiamoorthi இங்க திரும்ப திரும்ப தண்ணீர் கஷ்டம் மக்கள் பிரச்னை அப்புடீன்னுட்டே பேசுறோம்.. மக்கள் பிக் பாஷை பாக்க மாட்டாங்கன்னா நெனைக்குறீங்க? என்னுடைய வீட்டில் ஆயிரப்பிரச்சனை இருந்தாலும் அதைத்தாண்டி கொண்டாட்டம் குடும்பத்தில் அவசியம் பிறந்தநாளாகட்டும், பண்டிகையாகட்டும் ....... பிரச்சனையால் ஏற்படும் எரிச்சலோடும், கவலையோடும் வாழ்க்கையை நடத்த முடியுமா எழவு விழுந்த வீடு மாதிரி..? அந்த சோகம் புகுந்த வீட்டிலும் ஒரு திருமணம் நடத்த வலியுறுத்துகிறார்கள் ஏன்? .. எனக்கு ஒரு மாறுதல் தேவை, குடும்பத்துடன் வெளியூர் போவது, திரைப்படம் போவது, வெளியில் போய் சாப்பிடுவது....இதெல்லாம் பொருளாதாரம் படைத்தவர்களால் முடியும்....என்னை போன்ற நடுத்தர குடும்பத்துக்கு. தொலைக்காட்சியை தவிர வேறென்ன பொழுதுபோக்கு ? ( அறிவுரை கூறுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் தாங்கள் அன்றாடம் கடைபிடித்த நடைமுறை சாத்தியமான தொலைக்காட்சியை தவிர வேறேதாவது பணம் செலவு செய்யாத ஒரு பொழுது போக்கை கூறுங்கள்...நீங்கள் செய்யாத ஒன்றை செய்ய சொல்லாதீர்கள்....) பிக் பாஸ் வெற்றிக்கு காரணம்...இரவு 9 மணிக்கு ஓய்வு நேரத்தில் சீரியல்கள் ஆக்கிரமிருந்த காலத்தில் ரியாலிட்டி ஷோக்கள் ஒரு மற்றம் கொடுத்தன பல வெற்றி பெற்றன....அப்புறம் எல்லா சேனல்களும் ரியாலிட்டி ஷோக்கு மாறி அதுவும் ஒரு எல்லையை கடந்து வரவேற்பை இழந்தன....வரப்பிரசாதமாக வந்த பிக் பாஸ்...வித்யாசமானா ஒரு நிகழ்வு மக்களை சீரியல்களில் இருந்து வேறுபக்கம் நகர்த்தியது.... வெரைட்டி எதிர்பார்க்கும் மக்கள்..நீங்க என்ன சொல்றீங்க டிவி பாக்காதீங்க, சினிமா பாக்காதீங்க...உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க பாக்காதீங்க... உங்களுக்கு புடிக்கலைங்கறதுக்காக எங்களுக்கும் புடிக்க கூடாதுங்கறீங்களா? நீங்கள் என்னதான் வாயிலும் வயதிலும் அடித்துக்கொண்டாலும் மக்கள் அவர்கள் மனதுக்கு பிடித்ததை செய்தே தீருவார்கள்...
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in